ஐசிசி நல்லா ஏமாத்திட்டாங்க.. இப்படித்தான் எங்களுக்கு செய்வீங்களா.. சிக்கலில் மாட்ட விருப்பம் இல்லை – ஆப்கான் கோச் பேட்டி

0
3829

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இன்றைய போட்டிக்கான ஆடுகளம் குறித்து ஆப்கானிஸ்தான அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டிக்கான ஆடுகளம் முழுக்க பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு என இரண்டுக்குமே சாதகம் இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக டாஸ் வென்று நம்பி முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி ஏமாந்து 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த ஆடுகளத்தில் பந்தை கணித்து விளையாடுவது மிகவும் சவாலாக இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களும் கஷ்டப்பட்டார்கள். இறுதியாக 56 ரன்களை 8.5 ஓவரில் அவர்கள் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் “நான் இது குறித்து பெரிதாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் புளிப்பு திராட்சை என்கின்ற அளவிலும் சொல்லவில்லை. ஆனால் ஒரு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு இது சரியான ஆடுகளம் கிடையாது. பேட் மற்றும் பந்துவீச்சுக்கு சரியான அளவில் போட்டியிருக்க வேண்டும்.

அதே சமயத்தில் ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இருக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. பேட்ஸ்மேன்கள் சென்று அடித்து விளையாட கவலைப்படாத அளவுக்கு இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட் என்பது தைரியமாக அட்டாக் செய்து ரன்கள் எடுப்பதும் விக்கெட் எடுப்பதும் ஆகும். ஆனால் ஆடுகளம் அப்படி இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க:பும்ரா அர்ஸ்தீப் கிடையாது.. இவர்கிட்ட முதல் ஓவரை குடுங்க.. இந்த உ.கோ ஹீரோ இவர்தான் – அஸ்வின் அறிவுரை

உங்களுடைய எதிரணி சிறப்பான முறையில் செயல்பட்டு உங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது. சூழ்நிலைக்கு தகுந்தபடி அடாப்ட் செய்து கொள்வது பற்றியது. நாங்களும் தென் ஆப்பிரிக்கா போல பந்துவீசி இருந்தால் இரண்டாவது பகுதி வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.