கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அங்கிருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறு முகத்தில் இருக்கிறது. தற்பொழுது அவரது பேட்டிங் குறித்து மேத்யூ ஹைடன் பாராட்டி இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்து, இதற்கடுத்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஐந்து அரை சதங்களுடன் 400 ரன்கள் கடந்து இருக்கிறார். மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் அவர் ஐந்து சதங்கள் அடிப்பது இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் காரணமாக அவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
நேற்று டெல்லிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் குறித்து பேசிய மேத்யூ ஹைடன் “சாம்சன் கனவு போல பேட்டிங் செய்தார். அவர் 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அவர் தன்னுடைய தகுதியை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவர் ஸ்பின் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் இரண்டையும் சிறப்பாக விளையாடினார். அவர் ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்.
அவருடைய இன்னிங்ஸில் டைமிங் சிறப்பாக இருந்தது. மேலும் அவரிடம் பவர் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டுக்கு பவர் மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் அணிக்கான அவரது அர்ப்பணிப்பு தான் தனித்து நிற்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக நேற்று அவருக்கு இன்னிங்ஸ் முடிவில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சஞ்சு சாம்சன் குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் கூறும் பொழுது ” சஞ்சு சாம்சன் மிக நன்றாக பேட்டிங் செய்தார். பந்து வீச்சாளர்கள் அவரை அவுட் செய்ய பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, அவருக்கு எதிராக ஒரு பவுன்சரை வீசவும் பந்துவீச்சாளர்கள் பயப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : என் நாட்டுல என்னை எப்படி நடத்துறாங்க தெரியுமா?.. ஆனா இந்தியா அப்படியே வேற மாதிரி – டேவிட் வார்னர் பேட்டி
இந்தப் போட்டியில் மிகவும் சுவாரசியமாக சஞ்சு சாம்சன் ஆட்டமெடுப்பதற்கு முன்பாகத்தான் முதல் பவுன்சர் பந்தை கலீல் அகமது வீசினார். இதுஅவரது ஃபுட் வொர்க்கை பாதித்ததாக நினைக்கிறேன். ஏனென்றால் அவர் வழக்கமாக சிக்சர் அடிக்கும் வைட் ஸ்லோ பந்தில் அவர் ஆட்டம் இழந்தார்” என்று கூறி இருக்கிறார்.