வெறும் 12.1 ஓவர்.. 2வது டி20ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அபாரம்.. இளம் நியூசிலாந்து அணி பரிதாப தோல்வி

0
250

இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, இரண்டாவது போட்டி அதே ராவுல் பிண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் இழந்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் செய்பர்ட் 12 ரன்களிலும், ராபின்சன் நான்கு ரன்களிலும் வெளியேறினர். அதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதற்குப் பிறகு களம் இறங்கிய பாக்ஸ்கிராஃப்ட் 13 ரன்களிலும் சேம்ப் மேன் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அதற்குப் பின்னால் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்து அணி 18.1 ஓவரிலேயே 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் பிரேஸ்வெல் 11 பந்துகளில் நான்கு ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சினை இந்த போட்டியின் மூலம் பதிவு செய்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சாகின்ஷா அப்ரிடி மூன்று ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு பிறகு அப்ரார் அகமது நான்கு ஓர்கள் பந்துவீசி 15 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். சதாப்கான் இரண்டு விக்கட்டுகளையும், கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பிய முகமது அமீர் 3 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார்.

நியூசிலாந்து அணி பரிதாப தோல்வி

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆயுப் நான்கு ரன்களில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆஸம் 14 ரன்களில் வெளியேறினார். 41 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதற்கு பின்னர் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 45 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

மற்றொரு ஆட்டக்காரரான இர்ஃபான் கான் 18 ரன்கள் குவித்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ருடன் பாகிஸ்தான் அணியை வெறும் 12.1 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாத இளம் நியூசிலாந்து அணி தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் சாஹின் சா அப்ரிடி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதையும் படிங்க: ஸ்பின்ன பாத்ததும் அந்த பையன் மாறிட்டான்.. எங்க டீம்ல மோசமான பவுலர் இவர்தான் – ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் பேட்டி

இறுதியாக பாகிஸ்தான் அணி 92 ரன்கள் குவித்து மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், 12 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 47 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. எனவே வெற்றி இலக்கை தொடங்க நியூசிலாந்து அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.