உண்மை இதுதான்.. கோலி ரோகித் இந்த பேட்ஸ்மேன் முன்னாடி ஒன்னுமே கிடையாது – ஹர்பஜன் சிங் பேட்டி

0
299
Harbhajan

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டதும், அதில் இடம்பெற்று இருந்த வீரர்களில் பும்ரா மட்டுமே சிறப்பாக வழக்கம் போல் செயல்பட்டார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்புவது கவலை அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் நேற்று மிகச் சிறப்பான சதம் ஒன்றை அடித்தார். இதுகுறித்து ஹர்பஜன்சிங் தைரியமான கருத்தை கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகம் இல்லாத மும்பை ஆடுகளத்தில், சூரியகுமார் யாதவ் விளையாடிய முறை எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டு செய்வதாக இருந்தது. பந்தில் முற்றிலுமாக சீம் நிற்காத பொழுதே, மார்க்கோ யான்சன் பந்துவீச்சில் சூரியகுமார் தன்னுடைய வழக்கமான பேட்டி ஆரம்பித்து இருந்தார்.

- Advertisement -

நேற்று இது குறித்து பேசி இருந்த திலக் வர்மா கூறும் பொழுது சூரியகுமார் சீக்கிரத்தில் அதிரடிக்கு மாறியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். ஏனென்றால் அப்பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான சூழ்நிலையில் இல்லை.

மேலும் நேற்று சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் புத்திசாலித்தனமாகவும் இருந்தார். தான் சந்தித்த கம்மின்ஸ் முதல் ஓவரில் எவ்வளவு பொறுமை காட்ட முடியுமோ அவ்வளவு பொறுமையாக இருந்தார். ஆனால் அதே கம்மின்ஸ் கடைசி ஓவரை எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் அடித்தார்.

தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் சூரியகுமார் சிறப்பாக விளையாடி இருப்பது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ: ரசிகரின் ஐபோனை உடைத்த சிஎஸ்கே டேரில் மிட்சல்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “இரவில் பிரகாசிக்கும் ஒரே சூரியன் அவர். அவர் உங்கள் பந்தை எங்கு வேண்டுமானாலும் அடிப்பார் என்பதால் உங்களால் அவருக்கு பந்து வீச முடியாது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே அவர் முன்னால் ஒன்றுமே இல்லை. அவர் மற்றவர்களை விட சிறந்தவர். டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். நான் அவருக்கு பந்து வீசுவதற்கு ஏதாவது நகர்வை செய்ய வேண்டும் என்றால், ஒன்றுக்கு மூன்று முறை யோசிப்பேன்” எனக்கூறி இருக்கிறார்.