ஸ்பின்ன பாத்ததும் அந்த பையன் மாறிட்டான்.. எங்க டீம்ல மோசமான பவுலர் இவர்தான் – ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் பேட்டி

0
6247

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. சன்ரைசர்ஸ் அணையின் டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தில்லியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் தான் எடுத்த முடிவு முற்றிலும் தவறு என்று அப்போது யோசித்திருக்காது. பேட்டிங் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

ட்ராவிஸ் 89 ரன்களும் அபிஷேக் ஷர்மா 46 ரன்களும் குவித்து ஆட்டமிழக்க, அதற்குப் பிறகு மிடில் ஓவர்களில் நித்திஸ் ரெட்டி 37 ரன்களும், சபாஷ் அகமது அதிரடியாக விளையாடி 59 ரன்களும் குவித்தனர் இதனால் இறுதியாக சன்ரைஸ் ஹைதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்க ஜோடி விரைவிலேயே ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆட்டக்காரரான மெக்கர்க் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் என 65 ரன்கள் குவித்தார் அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த போரேல் 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்கள் குவித்தார். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் பேட்டி

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 32 பந்துகளில் 89 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்பொழுது
“அணியில் எல்லாரும் ஒரு ரோலில் இருக்கிறார்கள். வீரர்கள் மகிழ்ச்சியாக அவர்களது வேலையை செய்கின்றனர். நீங்கள் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கும் பொழுது, பந்திருக்கு தகுந்தவாறு ரியாக்ட் செய்தால் போதுமானது.

- Advertisement -

இந்தத் தொடரில் நாங்கள் பவர் பிளேவில் முதல்முறையாக சுழற் பந்துவீச்சை விளையாடினோம். சுழற் பந்துவீச்சை பார்த்ததும் அபிஷேக் ஷர்மா ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்து விட்டார். மேலும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடுவதை பார்த்து அவரது போக்கிலேயே விளையாட அனுமதிக்க முயற்சி செய்தோம். இந்தப் போட்டியில் அவர் அதை சிறப்பாகவே செய்தார். ஆப் ஸ்பின் பந்துவீச்சை பற்றி கேட்டால் எங்கள் அணியில் பந்து வீசும் வீரர்களில் நான்தான் ஒரு மோசமான பந்துவீச்சாளர் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க: கலக்கிட்டடா தம்பி.. 4-1-19-4.. 465 ரன் அடிச்ச போட்டி.. ஆனா நம்ம ஆளு வேற லெவல் – அபினவ் முகுந்த் பாராட்டு

பந்து வீசச் சொல்லி மார்க்ரம் என்னை தூண்டலாம். நித்திஷ் ரெட்டி மற்றும் சபாஷ் அஹமது ஆகியோரும் பந்துவீச்சில் கை கொடுத்தார்கள். நிறைய பந்து வீச்சாளர்கள் இருப்பது அணிக்கு நல்ல விஷயம். நிறைய டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். கடின உழைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைய நல்ல விஷயங்கள் ஒன்றாக அமைகின்றன. பேட்டிங் வரிசையிலும் டாப் ஆர்டரில் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.