கலக்கிட்டடா தம்பி.. 4-1-19-4.. 465 ரன் அடிச்ச போட்டி.. ஆனா நம்ம ஆளு வேற லெவல் – அபினவ் முகுந்த் பாராட்டு

0
4482
Natarajan

இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடந்த போட்டியில் மிகப்பெரிய ரன் மழை பொழிந்தது. ஆனாலும் இந்த போட்டியில் தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்காக விளையாடும் நடராஜன் மிகச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு 32 பந்தில் 89 ரன்களை ஹெட் எடுத்தார். அந்த இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதைவிட அதிரடியாக வெறும் 12 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 260 ரன்கள் தாண்டி மூன்றாவது முறையாக ஹைதராபாத் அணி ரன்கள் குவித்து இருப்பது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவாகி இருக்கிறது. பெரிய அளவில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க, ஹைதராபாத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் பந்துவீச்சில் குறைவான ரன்கள் தந்து அசத்தி வருகிறார்கள்.

இன்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் மட்டும் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். நடராஜனோ இதையும் தாண்டி நான்கு ஓவர் பந்து வீசி, 1 மெய்டன் செய்து 19 ரன்கள் மட்டும் தந்ததோடு, நான்கு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் நடராஜன் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ஒரு ரன் கூட தராமல் பந்து வீசியதோடு, அந்த ஓவரில் மட்டும் அக்சர் படேல், அன்றிச் நோர்க்கியா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார். பெரிய ரன் மழை பொழிந்த போட்டியில், விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு, ஓவருக்கு 4.8 ரன்கள் மட்டுமே தந்து நடராஜன் அற்புதப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நடராஜன் அமைதியான பையன்தான்.. ஆனா உண்மையில் வேற மாதிரி – புவனேஸ்வர் குமார் பேட்டி

இவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டி தமிழக வீரர் அபிநவ் முகுந்த் “மொத்தமாக 465 ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில், நம்ம ஆள் பவுலிங்ல 19ஆவது ஓவர்ல மூன்று விக்கெட் எடுத்ததோடு மெய்டனும் செய்திருக்கிறார். கலக்கிட்டடா!” என்று பாராட்டி டுவிட் செய்திருக்கிறார்.