உலக கிரிக்கெட்

மதிப்பு தெரியல.. அசால்டா ஆடுனது ஏமாற்றமா இருக்கு.. இந்த 2 இடத்துலதான் ஆட்டத்தை தவற விட்டோம் – பாக் கேப்டன் ஏமாற்றம்

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் முகமது ரிஸ்வான் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

பாகிஸ்தான் நியூசிலாந்து முதல் போட்டி

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லதாம் சிறப்பாக விளையாடி 104 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 118 ரன்கள் குவித்தார். மேலும் தொடக்க வீரர் வில் யங் சிறப்பாக விளையாடி 107 ரன்கள் குவித்தார்.

அதற்கு பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமான போட்டி என்பதால் பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தோல்வி அடைந்த காரணம் குறித்து சில விஷயங்களை கூறுகிறார்.

- Advertisement -

ஏமாற்றம் அளிக்கிறது

இதுகுறித்து அவர் கூறும் போது “நியூசிலாந்து அணி ஒரு நல்ல இலக்கை அடைந்தது. அதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாங்களும் அந்த இலக்கை அடைய 260 ரன்கள் வரை நெருங்கிக் கொண்டிருந்தோம். நாங்களும் எங்களால் முடிந்தவரை அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அவர்களை தடுக்க முயற்சித்தோம். ஆனாலும் அவர்கள் சிறப்பாக விளையாடி நல்ல இலக்கை அடைந்தார்கள். பிட்ச் நிலைமைகளை பார்க்கிறோம், முன்பு பேட்டிங் செய்வது போல ஆடுகளம் எளிதாக இல்லை.

இதையும் படிங்க:இந்திய அணி மோசமான ஆடுனா.. கம்பீர்தான் மாட்டுவார்.. ரோஹித்துக்கு பிரச்சனையே இல்லை – முகமது கைப் விளக்கம்

ஆனால் வில் யங் மற்றும் லாதம் இணைந்து பேட்டிங் செய்து போட்டியை மாற்றினார்கள்
இறுதியில் இதற்கு முன்னதாக லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்திருக்கிறோம். எங்களுக்கு பேட்டிங்கில் ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் காயம் அடைந்த ஃபகார் ஜமான் குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இரண்டு முறை நாங்கள் ஆட்டத்தை இழந்தோம், முதலாவதாக டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்கு பிறகு பேட்டிங் பவர் பிளேவில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் ஒரு சாதாரண போட்டியை போல் விளையாடி விட்டோம், எனவே தவறை சரி செய்து அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts