இந்திய அணி மோசமான ஆடுனா.. கம்பீர்தான் மாட்டுவார்.. ரோஹித்துக்கு பிரச்சனையே இல்லை – முகமது கைப் விளக்கம்

0
134

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி வெற்றியுடன் இந்தத் தொடரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக தற்போது திகழ்ந்து வரும் ரோஹித் சர்மா கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். சிறிய தவறினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணத்தில் இருப்பதாக தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா, 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் என முகமது கைப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் திட்டம் அதுவாக இருக்கலாம் எனவும், அணியில் யாருடைய இடம் கேள்விக்குறியாக இருந்தாலும் ரோஹித் சர்மாவின் இடம் பாதுகாப்பாக இருக்கும் என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எந்த சிக்கலும் இல்லை

இதுகுறித்து முகமது கைப் விரிவாக கூறும்போது “ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா செய்தது அனைவருடைய விருப்பமாகவும் இல்லை. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு இந்திய அணி அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை. கடவுள் அனுமதிக்கட்டும், இந்திய அணி மோசமாக விளையாடினால் பயிற்சியாளர்கள்கள் சிக்கலில் இருக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா எந்தப் பிரச்சனையும் இன்றி பாதுகாப்பாக இருப்பார். ஆனால் டெஸ்ட் போட்டிகளின் ரோஹித் சர்மாவிற்கு மாற்று வீரர் வரலாம், ஒரு நாள் தொடரில் அவருக்கு அந்த பிரச்சனை இருக்காது.

இதையும் படிங்க:பல விமர்சனங்களுக்கு மத்தியில்.. கில்லை துணை கேப்டனா நியமிக்க காரணமே இதுதான் – ரோஹித் சர்மா விளக்கம்

அவர் தற்போது சிறந்த பார்மியில் இருக்கிறார். சமீபத்தில் சதம் அடித்து இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். வெற்றி சதவீதத்தை பார்த்தால் இந்திய அணியை அற்புதமாக வழி நடத்தி இருக்கிறார். எனவே இந்திய அணி மோசமாக செயல்பட்டாலும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என நினைக்கிறேன்” என்று கைப் கூறியிருக்கிறார்.

- Advertisement -