“நல்லா விளையாடினாலும்.. ஸ்ரேயாஸ் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு போகனும். காரணம் இதுதான்” – ஓஜா கருத்து

0
53
Ojha

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. தற்பொழுது இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது.

இந்தத் தொடருக்கு இந்தியத் தேர்வுக்குழு முதலில் இரண்டு போட்டிகளுக்குஇந்திய அணியை மட்டுமே வெளியிட்டது. இந்திய வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அடுத்து மூன்று போட்டிகளுக்கான அணியை வெளியிட முடிவு செய்திருந்தது.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் காயத்தின் காரணமாக வெளியேறி இருந்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரது காயமும் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்தியத் தேர்வுக்குழு பார்த்து வருகிறது.

மேலும் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்டில் விளையாட முடியாத விராட் கோலி, அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்ப வந்து விளையாட விரும்புகிறாரா? என்பது குறித்தும் தேர்வுக்குழு பதிலை பெறுவதற்கு காத்திருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி நேற்றே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் யார் வருவார்கள்? யார் வெளியேறுவார்கள்? என்கின்ற குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் புதிய வீரர்களாக ரஜத் பட்டிதார் விளையாடும் வாய்ப்பை பெற்றும், சர்பராஸ் கான் அணிக்கு தேர்வாகி விளையாடும் வாய்ப்பை பெறாமலும் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு வாய்ப்புகளைப் பெற்று இரண்டையும் வீணடித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஓஜா கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் சற்று பின் தங்கிவிட்டார். விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களை பற்றி நீங்கள் பேசும் பொழுது, அவர்கள் திரும்பி அணிக்கு வரும் பொழுது, தானாகவே பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் வெளியேற வேண்டியதாக இருக்கும். ஏனென்றால் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

இதையும் படிங்க : “சச்சின் தாஸ் பேட்டிங் அந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் மாதிரி இருக்கு” – அஷ்வின் பாராட்டு

நீங்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்பவில்லை என்பது இதற்கு அர்த்தம் கிடையாது. ஆனால் அணிக்கு சிறந்த வீரர்கள் திரும்ப வருகின்ற பொழுது, நீங்கள் இந்த வீரர்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியாது. எனவே திரும்ப சென்று உள்நாட்டு போட்டிகளில் ரன்கள் குவிக்க வேண்டியதுதான்” என்று கூறி இருக்கிறார்.