16.3 ஓவரில் விழுந்த டெல்லி அணி.. சால்ட் காட்டடி.. சிஎஸ்கேவை புள்ளியில் முந்திய கொல்கத்தா

0
234
KKR

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு டெல்லி அணிக்கு எதிராக ஒரு சிறப்பான வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த அணி 16.3 ஓவர்களில் கொல்கத்தா அணியை வென்று புள்ளிப் பட்டியலில் தனது இடத்தை வலிமையாக்கி இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரித்திவி ஷா முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் உடன் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால் அவரது அதிரடி நீடிக்க வில்லை. 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து அபாய அதிரடி ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்

- Advertisement -

இன்றைய கொல்கத்தா ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்றபடி விளையாடாமல் தொடர்ந்து வெளியேறினார்கள். அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்தில் 27 ரன்கள், அக்சர் படேல் 21 பந்தில் 15 ரன்கள், ஸ்டப்ஸ் 7 பந்தில் 4 ரன்கள் என ஏமாற்றினார்கள். ஆனாலும் கடைசிக் கட்டத்தில் குல்தீப் யாதவ் வந்து 26 பந்தில் 35 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.

கொல்கத்தா அணியின் தரப்பில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். மேலும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித்ராணா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொல்கத்தா அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. சுனில் நரைன் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

- Advertisement -

இதையும் படிங்க : லசித் மலிங்காவின் அசத்தல் ஐபிஎல் ரெக்கார்டு உடைந்தது.. சுனில் நரைன் ஈடன் கார்டனில் புதிய சாதனை

இன்று மூன்றாவது இடத்தில் அனுப்பப்பட்ட ரிங்கு சிங் 11 பந்தில் 11 ரன் எடுத்தார். இதற்கடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்தில் 33 ரன், வெங்கடேஷ் ஐயர் 23 பந்தில் 26 ரன் எடுக்க, டெல்லி அணியை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் வென்றது. மேலும் எட்டு போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் எடுத்து இருந்த கொல்கத்தா, தற்போது இந்த வெற்றியின் மூலமாக 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை வலிமையாக்கி இருக்கிறது. ஒன்பது போட்டியில் தற்போது சிஎஸ்கே அணி 10 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.