“சச்சின் தாஸ் பேட்டிங் அந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் மாதிரி இருக்கு.. கலக்கிட்ட தம்பி” – அஷ்வின் பாராட்டு

0
184
Ashwin

தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்காகத் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாக் அவுட் சுற்றில் இருக்கிறது.

இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 245 ரன்கள் இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு இந்த இலக்கு எட்ட கூடியதாகவே தெரிந்தது.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது பகுதி ஆட்டத்தின் முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. மேலும் 32 ரன்களுக்கு முக்கிய நான்கு விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.

இப்படி நெருக்கடியான நேரத்தில் கேப்டன் உதய் சகரன் உடன் ஜோடி சேர்ந்த சச்சின் தாஸ் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக இந்த இளைஞர் ஷார்ட் பந்துகளில் விளையாடும் புல் ஷாட்டுகள் அவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது. இப்படியான பந்துகளுக்கு இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் திணறிக் கொண்டிருக்க, இந்த இளைஞர் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த ஷாட்டில் பந்தை காற்றிலும் அடிக்கிறார், தரையிலும் மடக்கி அடிக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் இவருக்கு ஷார்ட் பால் வியூகத்தை வைக்க, அதை சச்சின் தாஸ் மிக அற்புதமாக முறியடித்தார். மேலும் அந்தத் திட்டத்தில் அழகாக தைரியமாக பவுண்டரிகள் அடித்தார்.

இவர் அதிரடியாக 96 ரன்கள் எடுத்து தர, கேப்டன் உதய் சகரன் 81 ரன்கள் எடுக்க, இந்திய அணி அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.

இதையும் படிங்க : “பும்ராவுக்கு ஸ்கெட்ச் நான் போட முடியாது.. ஆனா இதைத்தான் செய்ய முடியும்” – மெக்கலம் பேச்சு

இந்த நிலையில் இந்த வீரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” சச்சின் தாஸ் பேட் ஸ்விங்கை பார்க்கும் பொழுது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் பேட் ஸ்விங் நினைவுக்கு வருகிறது. சச்சின் தாஸ் மற்றும் உதய் சகரன் இடையே அந்தப் பார்ட்னர்ஷிப் சமநிலையோடும் அமைதியாகவும் அற்புதமாகவும் இருந்தது” என்று பாராட்டி இருக்கிறார்.