“ODI கிரிக்கெட்.. மொட்டை ஆடுகளம்.. இதுல மட்டும்தான் இந்த இந்திய வீரர் ரன் அடிப்பார்” – கைஃப் நேரடி தாக்கு

0
228
Kaif

இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக இந்திய அணியில் தோல்வியுற்ற அந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்டவர்களில் கில் முதல் இடத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்களது கடைசி பத்து டெஸ்ட் இன்னிங்ஸ்கள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழக்கம் போல் பவுன்சர் பிரச்சனை இருக்க, தற்பொழுது கூடுதலாக இரட்டை மனநிலையுடன் விளையாடுகிறார்.

ஆனால் கில்லுக்கு அவரது பேட்டிங் தொழில்நுட்பமே பிரச்சனையாக இருக்கிறது. இதன் காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரது விக்கட்டை மிக சுலபமாக பந்துவீச்சாளரால் பெற முடியும் என்கின்ற சூழ்நிலை நிலவுகிறது. கில் தன்னுடைய பேட்டிங் அடிப்படையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்திய அணிக்கு தேர்வாகும் ஒரு வீரர் அடிப்படையில் வேலை செய்யும் அளவுக்கு இருப்பது அணிக்கு பெரிய பின்னடைவு.

இதன் காரணமாக அணியில் அவரது இருப்பு குறித்து வெளியில் ரசிகர்கள் பலமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே வாய்ப்பு தரக்கூடாது என எண்ணுகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கில் குறித்து பேசி உள்ள முகமது கைஃப் கூறும் பொழுது “கில் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில், பேட்டிங் செய்ய சாதகமான பிளாட் ஆடுகளங்களில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படியான ஆடுகளங்கள் கிடைக்காது. இங்கு பந்து பவுன்ஸ் ஆகவும் திரும்பவும் செய்யும். எனவே கில் அவருடைய புட்வொர்க்கில் வேலை செய்ய வேண்டும். அவர் தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் ரன் எடுப்பார் என்று நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. 2 மாற்றங்களே போதும்.. பட்டிதார் சர்பராஸ் 2பேரும் விளையாடலாம்.. கடப்பாரை பேட்டிங்

பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்த மன நிலையில் வந்து நீங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பதால் இது குறித்து வீரர்களிடம் பேசி இருப்பார் என நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.