2வது டெஸ்ட்.. 2 மாற்றங்களே போதும்.. பட்டிதார் சர்பராஸ் 2பேரும் விளையாடலாம்.. கடப்பாரை பேட்டிங்

0
223
Dravid

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறது.

மேலும் சுழற் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமான நிலைமை காணப்பட்ட பொழுதும் இந்திய அணி போட்டியை தோற்று இருக்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து துணை கேப்டன் போப் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய சுழற் பந்துவீச்சை முறியடித்த காரணத்தினால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி புதிய திட்டங்கள் உடன் வர வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை மறுநாள் பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடையும் என்றால் இந்த தொடரை வெல்வதற்குமான வாய்ப்புகளும் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த விராட் கோலி, கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் இடம் பெறவில்லை. இதனால் அனுபவமற்ற பேட்டிங் யூனிட் இந்தியாவுக்கு அமைந்திருக்கிறது. எனவே பேட்டிங் யூனிட்டை வலிமைப்படுத்த ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை கொண்டு வர வேண்டியது இருக்கிறது.

இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடக்கும் விசாகப்பட்டினம் மைதானம் ஹைதராபாத் மைதானம் போலவே கொஞ்சம் மெதுவானது. இங்கு பும்ரா மட்டுமே வேகம் பந்துவீச்சாளராக இருந்தாலும் போதும். இப்படியான திட்டத்தைதான் இங்கிலாந்து முதல் டெஸ்டில் கடைபிடித்தது.

- Advertisement -

இந்திய அணி இப்படி செய்யும் பொழுது மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளர்கள் என பந்துவீச்சு யூனிட் அமைத்து, சிராஜ் இடத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்மேனை விளையாட வைக்கலாம்.

கேஎல்.ராகுல் இடத்தில் ரஜத் பட்டிதார் விளையாடலாம். இதற்கு அடுத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இடத்தில் சர்பராஸ் கானை விளையாட வைக்கலாம். இதன் மூலம் இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தவிர ஒன்பது பேட்ஸ்மேன்கள் கிடைப்பார்கள். இது அனுபவமற்ற இந்திய பேட்டிங் யூனிட்டை வலிமைப்படுத்தும்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் விசாகப்பட்டினம் மைதானம் எப்படியானது?.. மழை வாய்ப்பு உண்டா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது

இங்கிலாந்து அணி போல இந்திய அணி இப்படி ஒரு தைரியமான முடிவை எடுத்து இரண்டாவது போட்டியை சந்திக்குமா? இரண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது!