NZvsSA.. முதல் டெஸ்ட்.. வில்லியம்சன் ரச்சின் ரவீந்தரா மாஸ் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

0
160
Rachin

தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவ வீரர்கள் என்று யாருமே கிடையாது. மொத்தமாக புதுமுக வீரர்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருக்கிறது.

- Advertisement -

ஒரு டெஸ்ட் தொடருக்கு தென் ஆப்பிரிக்கா மாதிரியான கிரிக்கெட் நாடு இப்படியான அணியை அனுப்பியது பெரிய சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டில் டி20 லீக் நடைபெற்று வருகிறது. அவர்களுடைய நாட்டில் கிரிக்கெட் இருக்க வேண்டும் என்றால் இதன் வழி வருகின்ற வருமானம் முக்கியம் என்று பேசப்படுகிறது. எனவே தென் ஆப்பிரிக்க முக்கிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள். எனவே இளம் வீரர்கள் கொண்ட அணி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கிய நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 20, டெவோன் கான்வே 1 ரன் எடுத்து வெளியேறினார்கள். புதுமுக வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக செயல்படுவதாக தெரிந்தது.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் அனுபவமற்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு, மேலும் இன்றைய ஆட்டநாள் முடிவில் ஆட்டம் இழக்காமல், இருவருமே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஓவர்.. அடுத்த சேவாக் ஜெயஸ்வால்தானா?.. இந்திய முன்னாள் வீரர் கருத்து

கேன் வில்லியம்சன் 259 பந்துகளில் 112 ரன்கள், ரச்சின் ரவீந்தரா 211 பந்துகளில் 118 ரன்கள் குவித்து களத்தில் நிற்கிறார்கள். நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருக்கிறது.