இதெல்லாம் ஓவர்.. அடுத்த சேவாக் ஜெயஸ்வால்தானா?.. இந்திய முன்னாள் வீரர் கருத்து

0
55
Sehwag

இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய நட்சத்திர வரவாக இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் வந்திருக்கிறார். உள்நாட்டுத் தொடர்களில் குறைந்த போட்டிகளில் விளையாடினாலும் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணிக்குள் வந்தார்.

தனக்கு வழங்கப்பட்ட முதல்வாய்ப்பான வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 171 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். மெதுவான அந்த ஆடுகளத்தில் அவருடைய பேட்டிங் தெளிவு மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து, தன்னுடைய எதிர்கால நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்கள் தொடாத பொழுது அவர் மிகுந்த கவனத்துடனும் புத்திசாலித்தனம் தொடரும் விளையாடி இந்திய அணியை நல்ல இடத்திற்கு கொண்டு வந்தார்.

தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக விளையாட யோசிக்காமல் செயல்படும் ஜெய்ஸ்வால் அடுத்த வீரேந்திர சேவாக்காக இருக்க முடியுமா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஜெயஸ்வால் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுகிறார் என்று சொல்லலாம். நீங்கள் சேவாத்தைப் பற்றி பேசினால் அது ஒன்று இரண்டு போட்டிகள் பற்றியது கிடையாது. அவரது முழு கிரிக்கெட் வாழ்க்கை பற்றியது.

- Advertisement -

அப்படியானால் இது அந்த இளம் வீரருக்கு ஆரம்பம்தான். அவர் எப்படி முன்னேறி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்போம். அவர் இப்படியே விளையாடட்டும் என்று வேண்டிக் கொள்வோம். சேவாக் பல ஆண்டுகளாக அதிரடியாக விளையாடியிருக்கிறார். ஜெய்ஸ்வாலை சேவாக் உடன் ஒப்பிடுவது இப்பொழுது கூடாது.

இதையும் படிங்க : SA20.. 466 ஸ்ட்ரைக் ரேட்.. ஜேஎஸ்கே அணி கடைசி நொடியில் பிளே ஆப்.. ஐபிஎல் 2010 தோனியை ஞாபகப்படுத்திய போட்டி

பந்தை எங்கே பிட்ச் செய்தாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கும் பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடுகிறார். ஜெய்ஸ்வால் இந்த நம்பிக்கையில்தான் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். மற்ற யாரும் விளையாடாத பொழுது நின்று விளையாடி அணியை நல்ல இடத்திற்கு கொண்டு சென்றார்” என்று கூறியிருக்கிறார்.