“ஸ்டோக்ஸ் ரோகித் கிடையாது.. இந்த இந்திய வீரர்தான் காந்தம் மாதிரி சூப்பர் ஸ்டார்” – இங்கிலாந்து வீரர் பேச்சு

0
93
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி இரண்டு நாளில் எல்லாம் தலைகீழாக மாறி நடந்திருக்கிறது.

போட்டியை காண வந்த இங்கிலாந்து ரசிகர் கூட்டம் பார்மி ஆர்மி முதல் இரண்டு நாட்கள் மைதானத்தில் மிகவும் சோர்வாக காணப்பட்டார்கள். ஆனால் கடைசி இரண்டு நாட்கள் எல்லாமே அவர்களுக்கு சாதகமாக நடந்து முடிந்து, பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணியின் இந்தியாவுக்கு எதிரான இந்த வெற்றி அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய பக்கங்களில் எழுதப்படும்.

அவர்கள் தற்போது பின்பற்றி வரும் பாஸ்பால் முறை இந்தியாவில் வெற்றி பெறுமா என்பது தான் பெரிய கேள்வியாக தொடக்கத்தில் இருந்து இருந்து வந்தது. இப்பொழுது அதற்கு பதில் கிடைத்துவிட்டது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை பாஸ்பால் முறையில் விளையாடுவதற்கான அங்கீகாரம் அதிகாரப்பூர்வமாக கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.

ஒரு கட்டத்தில் மூன்றாவது நாளில் 160 ரன்களை தாண்டும் பொழுது இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்பொழுது ஆட்டம் இந்தியா கையில்தான் இருந்தது. ஆனால் கடைசி ஒரு நாளில் எல்லாம் மாறிவிட்டது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்துவிட்டது என்று தற்போது பலரும் பேசி வருகிறார்கள்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆதர்டன் பேசும் பொழுது ” விராட் கோலிதான் இங்கு விளையாட்டில் மிகப்பெரிய ஸ்டார். விளையாட்டின் ஆதரவாளர்கள் எப்பொழுதும் சூப்பர் ஸ்டாரர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் விராட் கோலியை விட இங்கு பெரியவர்கள் யாருமே கிடையாது.

அவர் எல்லோரையும் வசிகரிக்கும் ஒரு கவர்ச்சிகரமான வீரராக இருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். மேலும் பொதுவாகவே அவர் ஒரு கவர்ச்சிகரமான வீரராக இருக்கிறார். அவரிடம் இருந்து பெரிய பங்களிப்புகள் வராத பொழுது கூட, களத்தில் மிகவும் ஆற்றலுடன் சுற்றிவருவார். அவர் அப்படியான காந்தத் தன்மை கொண்டவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “முட்டாள்தனத்துக்கும் தைரியத்துக்கும் நடுவுல வித்தியாசம் இருக்கு.. அதுதான் எல்லாமே” – தினேஷ் கார்த்திக் அதிரடி

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து நடைபெறும் இரண்டாவது போட்டிக்கு பிறகு விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப வருவார்!