“முட்டாள்தனத்துக்கும் தைரியத்துக்கும் நடுவுல வித்தியாசம் இருக்கு.. அதுதான் எல்லாமே” – தினேஷ் கார்த்திக் அதிரடி

0
319
Rohit

நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த நாட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொடரில் அவர்களுடைய முக்கிய சுழற் பந்துவீச்சாளர் லீச் காயம் முழுவதும் சரியாகாமல் இருந்தார். மேலும் அவர்களுக்கு மிக முக்கியமாக பார்க்கப்பட்ட இளம் சுழற் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் விசா காரணமாக முதல் போட்டிக்கு இந்தியா வர முடியவில்லை.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது நாளின் துவக்கத்தில் கூட இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. இத்தனையையும் தாண்டி இங்கிலாந்து இந்தியாவில் வைத்து இந்தியாவை வென்று இருப்பது, அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியில் பேட்டிங்கில் போப் தனி வீரராக ஆதிக்கம் செலுத்த, பந்துவீச்சாளராக அறிமுகவீரர் டாம் ஹார்ட்லி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து தரப்பில் மட்டும் அல்லாது இந்திய தரப்பில் இருந்தும் நிறைய பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவருமே போப் பேட்டிங் மிகவும் புகழ்ந்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த வகையில் டாம் ஹார்ட்லி பற்றி பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும்பொழுது ” முட்டாள் தனமாக இருப்பதற்கும் தைரியமாக இருப்பதற்கும் இடையிலே இருக்கும் வித்தியாசம்தான் விளைவுகளாக மாறுகிறது.

இதையும் படிங்க : “கமெண்ட்ரி செய்த எங்களுக்கு தெரிஞ்சது.. ரோகித் சர்மாவுக்கு தெரியலையா?” – ஆகாஷ் சோப்ரா அதிரடி கேள்வி

ரோகித் சர்மா களத்தில் என்ன செய்கிறார் என்பதை பார்த்து பின் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டார். ஆனால் டாம் ஹார்ட்லி இதற்கு நேர்மாறாக ஒன்றை செய்தார். அவர் பேட்டிங் செய்ய வந்த பொழுது ஜடேஜா பந்துவீச்சை வைத்து, தனது பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொண்டார். அவர் பேட்டிங் செய்யும்பொழுது வேகமான பந்துகள் அடிப்பதற்கு எளிதாக இருப்பதை உணர்த்தார். எனவே அவர் மெதுவாக வீசி சாதித்தார்.

இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் பெரிய வெற்றியாகும். அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை. எழு ஒரு அனுபவ சுழற் பந்துவீச்சாளரும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவர்கள் சாதித்திருப்பது பெரிய விஷயம்” என்று கூறி இருக்கிறார்.