“இந்திய அணியிலிருந்து யாரும் என்கிட்ட பேசல.. ஏமாற்றமா இருக்கு” – ஹனுமா விகாரி பேச்சு

0
301
Vihari

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் மிடில் வரிசையில் ஹனுமா விகாரி மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார். ஆனால் புஜாரா மற்றும் ரகானே இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து தங்கள் இடத்தை உறுதி செய்து வந்தார்கள்.

இதன் காரணமாக அவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைப்பது பெரிய கடினமாக இருந்தது. சில தொடர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தாலும் அவரால் விளையாட முடியாது.

- Advertisement -

மேலும் இந்திய டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம் பெறுவதால், பேட்டிங் நீளம் கிடைத்து விடுகிறது எனவே இவருக்கு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காது என்கின்ற நிலை தான் இருந்தது.

வெளிநாடுகளில் கடினமான சூழ்நிலங்களில் நடைபெறும் டெஸ்டுகளில் மட்டுமே இவருக்கு சில ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிட்னி மைதானத்தில் இவரும் அஸ்வினும் காயத்தோடு விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்த போட்டியை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

தற்பொழுது ஆந்திர மாநிலத்திற்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஹனுமா விகாரி இந்திய அணிக்கு திரும்புவது குறித்து சில முக்கியமான விஷயங்களை வருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “சமீபத்தில் இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. நான் பேட்டிங்கில் என்ன மேம்படுத்த வேண்டும் என்று ராகுல் டிராவிட் அவர்கள் நான் விளையாடிய கடைசி டெஸ்டில் என்னுடன் பேசினார்.

அதற்குப் பிறகு யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் என் பேட்டிங்கை மேம்படுத்தி என்னுடைய விளையாட்டு ரசித்து விளையாடுவதில் குறிக்கோளாக இருந்து வருகிறேன். இப்படி செய்யாவிட்டால் வேறு எதுவுமே இருக்க முடியாது.

இதையும் படிங்க : “U19 உலகக் கோப்பை அரையிறுதி.. நாடுதான் முக்கியம்.. என் அண்ணன் சொன்னபடி விளையாடுவேன்” – முசிர் கான் பேச்சு

நான் மிடில் ஆர்டரில் அணிக்காக விளையாடும் பொழுது என்னால் முடிந்ததை செய்ய முயற்சி செய்கிறேன். தற்பொழுது வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கட்டத்திற்கு வந்து விட்டேன். நான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை என்பது ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் காயத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி டிரா செய்த சிட்னி போட்டி எப்பொழுதும் என் மனதில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -