“U19 உலகக் கோப்பை அரையிறுதி.. நாடுதான் முக்கியம்.. என் அண்ணன் சொன்னபடி விளையாடுவேன்” – முசிர் கான் பேச்சு

0
519
Musheer

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலகக் கோப்பையில், இன்று தென் ஆப்பிரிக்க அணியை அரையிறுதியில் இந்திய அணி சந்தித்து விளையாடுகிறது.

இந்திய அணியில் அண்டர் 19 அணியில் சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கான் இடம் பெற்றிருக்கிறார். பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வரும் இவர் இதுவரை இந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இடதுகை சுழற் பந்தையும் வீசக்கூடிய இவர் விக்கெட்டுகளையும் கைப்பற்றி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒட்டுமொத்தமாக இவருடைய செயல்பாடுகள் அணியில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய இவரை, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு தருவதாக ஆறாவது இடத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுதும் கூட அணிவுடன் மிகச்சிறப்பான முறையில் எனது விளையாடி இருந்தார். அணிக்கு ஏற்ற வீரராக தெரிகிறார்.

- Advertisement -

தனது அண்ணன் குறித்தும் அரையிறுதி போட்டி குறித்தும் பேசி உள்ள அவர் “இந்த உலகக் கோப்பைக்கு முன் என்னிடம் பேசிய அவர் கூறியது என்னவென்றால், இந்தியாவுக்காக விளையாடுவதை விட பெரிய விஷயம் வேறு எதுவும் கிடையாது என்றும், அதனால் ரசித்து விளையாடும் படி கூறினார். மேலும் பேட்டிங் பந்துவீச்சு என்று எந்த வாய்ப்பு கிடைத்தாலும், சிறப்பாக செயல்பட்டு அணியை மேலே ஏற்றி வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் நீங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற காரணத்தினால், முழு மனதுடன் விளையாடுங்கள் என்று என்னிடம் கூறியிருக்கிறார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் எப்படி பேட்டிங் செய்கிறார்? எப்படி இன்னிங்ஸை உருவாக்குகிறார்? எப்படி எப்பொழுதும் அணியின் வெற்றி குறித்து யோசிக்கிறார்? என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் செயல்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் உலகக் கோப்பையை வெல்லும் வரை திருப்தி அடைய மாட்டேன். அதிக ரன் எடுத்த வீரராக இருப்பதைப் பற்றி நான் யோசிப்பதில்லை. அதையெல்லாம் முடிவுகள் வரும் பொழுது கடைசியில் பார்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : “மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன்” – முதல் முறையாக காரணம் கூறிய மார்க் பவுச்சர்

எங்களுக்கு எந்த பதட்டமும் கிடையாது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதையே அரையிறுதி போட்டியிலும் செய்வோம். நாங்கள் இன்னொரு போட்டியாகவே பார்ப்போம். நாங்கள் எந்த கூடுதல் அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -