“கோலியும் இல்ல.. வயசு 37 ஆச்சு.. ரெண்டே சதம்தான்” – ரோகித் சர்மாவை ஆஸி லெஜன்ட் விமர்சனம்

0
570
Rohit

கிரிக்கெட்டில் எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அந்த விளையாட்டை பெரிய ரசிகர் கூட்டம் தொடர்ந்து பின்பற்றும் அளவுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பொழுது, அந்த அணி இந்தியாவில் எப்படி தங்களுடைய பாஸ்பால் முறையை விளையாடும் என்கின்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் இருந்தது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து திரும்பி விட்டார். இதெல்லாம் இங்கிலாந்து அணியின் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

மேலும் எதிர்பாக்கப்பட்டது போலவே நான்கு நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்களில் இங்கிலாந்து தோல்விக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. எனவே இது வழக்கமான இந்திய சுற்றுப்பயணம் ஆகத்தான் இருக்கும் என இங்கிலாந்தை அனைவரும் கணித்தனர்.

இந்த நிலையில் தான் அவர்கள் மீண்டு வந்து ஒரு மறக்க முடியாத டெஸ்ட் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்கள். இது பலரையும் ஆச்சரியப்படுத்திய வெற்றியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் லெஜன்ட் ஜெஃப்ரி பாய்காட் கூறும் பொழுது ” விராட் கோலியை இந்தியா மிகவும் தவற விடுகிறது. ஜடேஜா தற்பொழுது தொடையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிவிட்டார். ரோகித் சர்மாவுக்கு தற்பொழுது கிட்டத்தட்ட 37 வயது ஆகிறது. அவர் நன்றாக விளையாடினாலும் கூட அவர் கடைசியாக இரண்டு சதங்கள் மட்டுமே இந்தியாவில் எடுத்திருக்கிறார். களத்திலும் பலவீனமாக இருக்கிறார்கள். போப் 110 ரன்னில் தந்த கேட்ச் வாய்ப்பை வீணடித்து, போட்டியையும் தோற்று விட்டார்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் மூவரும் இந்திய சூழ்நிலைக்கு சிறப்பானவர்கள். ஆனால் அவர்கள் ஹைதராபாத் ஆடுகளத்திற்கு சரியானவர்களாக இல்லை. இங்கிலாந்து ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஆடி ஆட்டத்தை மாற்றிய பொழுது இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

எப்போதாவது ஒரு பெரிய வெற்றியை பெறுவதற்கு அணிகள் மிக நெருக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து அணி தற்பொழுது அப்படியான ஒரு வாய்ப்பில் இருக்கிறது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர வெல்ல முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக விராட் கோலி வருவதற்கு முன் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : “கோலி பும்ரா கிடையாது.. டி20 உலக கோப்பையை வாங்கித் தரப்போறது 24 வயசு பையன்தான்” – பீட்டர்சன் கணிப்பு

விராட் கோலி இந்தியா ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 60 ரன்கள் வைத்திருக்க கூடிய அற்புதமான பேட்ஸ்மேன். மேலும் களத்திலும் அவர் ஆற்றல் மிகுந்தவராக இருப்பார். எனவே இங்கிலாந்து அவர் வருவதற்கு முன்பாக இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.