“கோலி பும்ரா கிடையாது.. டி20 உலக கோப்பையை வாங்கித் தரப்போறது 24 வயசு பையன்தான்” – பீட்டர்சன் கணிப்பு

0
227
Pieterson

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மே மாதம் முடிவடைந்து ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரண்டு நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இந்தியா இறுதியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து 13 வருடங்களாக இந்திய அணி எந்த வடிவத்திலும் உலகக்கோப்பை தொடர்களை கைப்பற்றவில்லை.

- Advertisement -

இதற்கு நடுவில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்தியா மொத்தம் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை தவற விட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வெகு வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றாமல் இருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த முறை இந்திய சூழலை ஒட்டி அமையும் வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று, உலகக் கோப்பை பசிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

மேலும் இந்திய டி20 உலக கோப்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. மேலும் மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியின் விளையாடுவது உறுதியாகிவிட்டது. மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் யார் என்பது கேள்வியாக இருக்கிறது?

- Advertisement -

மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இருப்பது கடினம். இந்த முறை இரண்டாவது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவே இருப்பார். எனவே மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கில் மற்றும் ருதுராஜ் இருவரும் போட்டியிடுகிறார்கள். ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களுக்கு வாய்ப்புகிடைக்கலாம்.

வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் நடந்த ஒரு டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து காலிங் வுட் தலைமையில் வென்ற பொழுது, அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் கெவின் பீட்டர்சன்.

கெவின் பீட்டர்சன் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பற்றி பேசும் பொழுது ” இந்திய அணியில் யார் இருப்பார்கள் என்பது ஐபிஎல் தொடரில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். அப்பொழுது இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் இருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகள சூழ்நிலைகள் இந்திய ஆடுகள சூழ்நிலைகள் போலவே இருக்கும். அங்கு சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும்ஆடுகளங்கள் நன்றாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : “ODI கிரிக்கெட்.. மொட்டை ஆடுகளம்.. இதுல மட்டும்தான் இந்த இந்திய வீரர் ரன் அடிப்பார்” – கைஃப் நேரடி தாக்கு

இங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்தான் இருக்கப் போகிறார். இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் அவர் பங்கு நிறைய இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.