ஆர்சிபி 5 கோடியை சாக்கடையில் வீசிடுச்சுனு சொன்னாங்க – யாஸ் தயாள் மற்றும் தந்தை உருக்கம்

0
351
Dayal

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு திடீர் கதாநாயகனாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தயாள் உருவாகி இருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்தது. இது குறித்த உருக்கமான தகவல்களை அவரும் அவருடைய தந்தையும் பேசி இருக்கிறார்கள்.

கடந்த முறை ஐபிஎல் தொடரில் யாஸ் தயாளின் இருபதாவது ஓவரில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அங்கிருந்து ரிங்கு சிங் வாழ்க்கை மேலே உயர ஆரம்பித்தது. ஆனால் யாஸ் தயாள் வாழ்க்கை கீழே இறங்க ஆரம்பித்தது.

- Advertisement -

இந்த நிலையில் அவரை குஜராத் அணியும் இந்த முறை கழட்டி விட்டது. இப்படியான நிலையில்தான் அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஏலத்தில் வாங்கப்பட்ட ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் குறித்து எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருந்தது.

இப்படியான நிலையில் தான் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக கடைசி ஓவரில் 16 ரன்களை பாதுகாத்து, அவருடைய விக்கெட்டையும் கைப்பற்றி, ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் கடைசியில் நுழைவதற்கு யார் தயார் முக்கியமான காரணமாக இருந்து கதாநாயகன் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து யாஸ் தயாள் கூறும் பொழுது ” நான் கடைசி ஓவரை வீசி முடித்ததும் என் தாயிடம் எப்படி உணர்கிறீர்கள் என்றுதான் முதலில் கேட்டேன். கடந்த சீசனில் ஏற்பட்டது ஒரு பயங்கரமான கனவு. தோனி 110 மீட்டர் சிக்சர் அடித்ததும் அந்த கனவு மீண்டும் என்னை வேட்டையாடத் தொடங்கியது. ஆனால் இந்த முறை ஏதாவது நல்லது நடக்கும் என்று நான் நம்பினேன். இது என்னுடைய கடின உழைப்பின் பலன். இறுதியில் கடவுள் எனக்கு கருணை காட்டினார் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து யாஸ் தயாளின் தந்தை கூறும்பொழுது “என் மகன் ஓவரில் ரிங்கு சிங் ஐந்து சிக்ஸர்கள் அடித்த பிறகு ஒரு மீம் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. அதில் என்ன எழுதி இருந்தது என்று எனக்கு இப்பொழுது வரை நியாபகத்தில் இருக்கிறது. அதில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ஓட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நின்று விட்டது என்று எழுதப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : கொல்கத்தா அணியை இந்த விஷயம் பாதிக்காது.. அவங்க எப்படி போறாங்கனு மட்டும் பாருங்க – சேவாக் பேச்சு

மேலும் எங்களுடைய குடும்பம் மொத்தமும் அவர்கள் இருந்த வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். இது மட்டும் இல்லாமல் ஆர்சிபி அணி அவரை ஐந்து கோடிக்கு வாங்கிய பிறகு, ஆர்சிபி அந்த ஐந்து கோடியை சாக்கடையில் வீசி விட்டதாக ஒருவர் கூறியது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -