ஆர்சிபிக்கு இனி தான் இருக்கு.. ப்ளே ஆஃப்பில் காத்திருக்கும் முக்கிய பிரச்சனை.. ராஜஸ்தானை வெல்லுமா?

0
24
RCB

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு வந்த விதத்தில் இருந்து, தற்போது பிளே ஆப் சுற்றில் விளையாடும் நிலையில் முக்கிய சவால் ஒன்று காத்திருக்கிறது.

ஆர்சிபி அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் 8 ஆட்டங்களில் 7 ஆட்டங்களைத் தோற்றுவிட்டது. அங்கிருந்து அவர்கள் 6 ஆட்டங்களை தொடர்ந்து வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது. அதாவது 6 போட்டிகளை வென்றால் கூட உறுதியாக பிளே ஆப் வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலைமை தான் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளின் முடிவுகள் ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைந்தது. இத்தோடு ஆர்சிபி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளையும் வென்றது. இப்படி உள்ளே வெளியே என்று எல்லாமே சிறப்பாக சென்றதனால் மட்டுமே ஆர்சிபி அணி தற்போது ப்ளே ஆப் சுற்றில் இருக்கிறது.

ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பதுநிச்சயம் முடியும் என்று விளையாடவில்லை. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்கின்ற மன நிலையில் அவர்கள் விளையாடினார்கள். இதன் காரணமாகவே அவர்கள் அச்சமின்றி பேட்டிங்கில் போட்டியை அணுக முடிந்தது. மேலும் களத்தில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் முடிவுகளை எடுக்க முடிந்தது.

உதாரணமாக டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டம் இழந்த பொழுது அவர் எந்த வருத்தமும் இல்லாமல் வெளியே சென்றார். அடுத்து வந்த வீரர்களும் எந்த வித கவலையும் இல்லாமல் அடித்து விளையாடினார்கள். மேலும் பந்து வீச்சில் முதல் ஓவரை ஒரு சுழல் பந்துவீச்சாளருக்கு கொடுத்து ஆரம்பித்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடியதால் அச்சமில்லாமல் விளையாடினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி 5 கோடியை சாக்கடையில் வீசிடுச்சுனு சொன்னாங்க – யாஸ் தயாள் மற்றும் தந்தை உருக்கம்

தற்போது அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் எதிர்பார்ப்புகள் கூடிவிட்டது. அவர்கள் இதன் காரணமாக அச்சமற்ற முறையில் விளையாடும் மனப்போக்கை விட்டால், தோல்வியை தவிர்க்க முடியாது. ஆர்சிபி அணிக்கு முக்கிய பிரச்சினையாக தற்பொழுது இதுதான் மாறி இருக்கிறது. கிரிக்கெட் விமர்சகர்கள் ஆர்சிபி அணி தொடர்ந்து எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கிக் கொள்ளாமல் விளையாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மேலும் அப்படி விளையாடுவது கடினம் என்றும் கூறுகிறார்கள். இது தற்பொழுது ஆர்சிபி அணிக்கு புது தலைவலியாக உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.