சிஎஸ்கே பேசாம ஆர்சிபிக்கு ஒரு ஐபிஎல் கப்ப கொடுக்கலாம்.. ஊர்வலமே நடத்துவாங்க – அம்பதி ராயுடு பேச்சு

0
166
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்த ஆர்சிபி அணி மூன்றாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணியுடன், நாளை மறுநாள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் எலிமினேட்டர் சுற்றில் மோதுகிறது. ஆர்சிபி அணி குறித்து அம்பதி ராயுடு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கடைசி ஆறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வென்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது, ஆர்சிபி அணியின் தனிப்பட்ட வரலாற்றில் மட்டும் அல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலும் மிக நீண்ட காலம் பலராலும் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கும்.

- Advertisement -

கடைசி 6 போட்டிகளை வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று இருந்த நிலையில், 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி என் தகுதி பெற்று இருப்பது, விளையாட்டில் சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக நாளை தோல்வியை சந்திக்கும் அணிகள் ஆர்சிபி அணியின் வெற்றியை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் தற்பொழுது ஆர்சிபி அணி மற்றும் ரசிகர்களின் ப்ளே ஆப் சுற்றிற்கான தகுதி கொண்டாட்டம் மிக அதிகபட்சமாக இருந்து வருகிறது. அவர்கள் ஐபிஎல் தொடரை வென்றது போல் கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு புறத்தில் நகைச்சுவையாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “லீக் சுற்றில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வென்றது ஐபிஎல் கோப்பையை வென்றது போல கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக வீதிகளில் இதை நம்மால் பார்க்க முடிகிறது. சிஎஸ்கே அணி தங்களிடம் இருக்கும் ஐபிஎல் கோப்பையில் ஒன்றை கொடுத்தால் ஆர்சிபி இதை வைத்து ஊர்வலம் நடத்தலாம்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு இனி தான் இருக்கு.. ப்ளே ஆஃப்பில் காத்திருக்கும் முக்கிய பிரச்சனை.. ராஜஸ்தானை வெல்லுமா?

மேலும் நாக அவுட் சுற்றில் என்னுடைய விருப்பமான அணி ஆர்சிபி அணிதான். ஏனென்றால் அவர்கள் மிக முக்கியமான சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களை நான் இப்பொழுது ஒரு மகிழ்ச்சி அடைந்த அணியாக பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -