புது கேப்டன் ரிஷப் பண்ட்டை.. லக்னோ டீம் இப்படிதான் பாப்பாங்க.. நிக்கோலஸ் பூரன் வெளிப்படையான பேச்சு

0
310

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிக விரைவாக நடைபெற உள்ள நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி புதிய கேப்டன் உடன் இந்த சீசனில் களம் இறங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் தக்கவைக்கப்பட்ட வீரரான வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன் லக்னோ அணி குறித்தும் இந்திய ரசிகர்கள் குறித்தும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணியின் புதிய கேப்டன்

கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக தலைமை தாங்கிய நிலையில் அவருக்கும் அணியின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கேஎல் ராகுலை லக்னோ அணி தக்க வைக்கவில்லை. மாறாக அவருக்கு பதில் அதே விக்கெட் கீப்பிங், அதிரடி பேட்டிங் மற்றும் கேப்டன் திறமையோடு இருக்கக்கூடிய ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அதிகாரப்பூர்வ கேப்டனாகவும் அறிவித்தது.

ரிஷப் பண்ட் கடந்த சீசனில் டெல்லி அணி கேப்டனாக இருந்த நிலையில் இந்த ஆண்டு கேஎல் ராகுல் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தங்கள் புதிய கேப்டன் குறித்து பேசிய லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு 100% மக்கள் ஆதரவு இருப்பதாக சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரன் ஆதரவு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” எங்களுக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. எங்கள் அணியை பார்க்கும்போது அனுபவம் மற்றும் இளமை என சரிசமமாக கலந்த கலவையில் உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களோடு நாங்கள் தலைமை தாங்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது லக்னோ அணிக்கு பண்ட் கேப்டனாக இருக்கிறார். ஒரு புதிய காற்று தற்போது எங்கள் அணியின் மீது இருக்கிறது. அவர் அனுபவம் மற்றும் திறமை கலந்த கேப்டனாக வருகிறார்.

இதையும் படிங்க:எங்கள் கனவை அவர் நிறைவேற்றுவாரு.. ரொம்ப வருஷமா இதுக்குதான் ஏங்கிட்டு இருக்கோம் – பஞ்சாப் வீரர் பேட்டி

மேலும் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். மைதானத்திற்கு உள்ளே மற்றும் வெளியே என 100 சதவீதம் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன. எனவே அது எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆட்டத்தின் விதிகள் மற்றும் வீரர்கள் என அனைத்தும் சிறப்பாக மாறிவிட்டது. புதிய திறமையான வீரர்கள் களமிறங்க தயாராக இருக்கின்றனர். இந்தியாவைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நான் விரும்புகிறேன். நிச்சயமாக மக்கள் உங்களை வரவேற்கும் விதம் அவர்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கும் விதம் அவர்கள் காட்டும் அன்பு உண்மையிலேயே பிரமாதமாக இருக்கிறது என்று பூரன் பேசியிருக்கிறார்.

- Advertisement -