18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
என்ற சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் பஞ்சாப் அணி கேப்டன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கிறது. அந்த அணிக்கு குமார் சங்கக்கரா, மகேலா ஜெயவர்த்தனே, யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல் உள்ளிட்ட 17 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தி இருக்கிறார்கள். இருப்பினும் இதுவரை அந்த அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்கிற சோக வரலாறு நீண்ட காலமாக இருக்கிறது.
எனவே அதனை போக்கும் விதமாக இந்த ஆண்டு 26.75 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்தக் குறையை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு அவர் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்ததால் அவர் மீது தற்போது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் ஸ்ரேயாஸ் அய்யர் எங்கள் அணியின் ஃபேவரிட் கேப்டனாக இருப்பார் எனவும், பஞ்சாப் அணியின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்வார் எனவும் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஸ்ரேயாஸ் அய்யரை பொறுத்தவரை ஒரு அற்புதமான கேப்டனாக இருக்கிறார். பஞ்சாப் அணி நீண்ட காலமாக தங்கள் முதல் பட்டத்திற்காக காத்திருக்கிறது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் தங்கள் அணியில் இணைந்த உடன் அந்த காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் எங்களுக்கு ஒரு அதிர்ஷ்டசாலியாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தற்போது ஒரு புதிய அணி கிடைத்துள்ளது. அது மிகவும் உறுதியாக இருக்கிறது.
இதையும் படிங்க:விராட் புத்திசாலித்தனமா இதை மட்டும் செஞ்சா.. 2025 ஐபிஎல் கப் ஆர்சிபிக்கு தான் – ஏபி டிவில்லியர்ஸ் கணிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து எங்கள் முதல் கோப்பையை பெறுவதற்கு உதவ வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என அவர் கூறியிருக்கிறார். ஸ்ரேயாs கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், உள்நாட்டுத் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு தனது மாநில அணிக்காக சில கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முதல் கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பலாம்.






