மயங்க் யாதவ் சமர் ஜோசப்.. 2 பேரும் ஒன்னா ஒரே போட்டியில் ஆடுவாங்களா.? – லக்னோ நிக்கோலஸ் பூரன் நச் பதில்

0
1282
Mayank Yadav and Samar Joseph

லக்னோவில் நடைபெற்ற பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தொடங்கியது. ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என அற்புதமாக தொடங்கிய கேஎல் ராகுல் 15 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிகாக் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் குவித்தார். பின்னர் மிடில் ஓவர்களில் களமிறங்கிய அணியின் கேப்டன் பூரன் லக்னோ அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினார்.

- Advertisement -

21 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 42 ரன்கள் விளாசினார். அதிலும் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சகாரின் ஓவரில் அவர் அடித்த ஆப்சைடு பவுண்டரி அவரின் பேட்டிங் தரத்தை அற்புதமாகக் காட்டியது. இறுதியில் க்ருனால் பாண்டியாவும் தனது பங்குக்கு அதிரடியாக விளையாட லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது. க்ருனால் பாண்டியா அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார்.

பின்னர் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஒரு இளம் வீரர் அதிர்ச்சி அளிப்பார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்காது. பதினோரு ஓவர்களில் நூறு ரண்களை தொட்ட பஞ்சாப் அணி இளம் அறிமுக பந்துவீச்சாளர் மயங்க் யாதவின் அதிவேக பந்துவீச்சால் பேர்ஸ்டோ தனது விக்கட்டை பறி கொடுத்தார்.அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் மயங்க் யாதவின் பந்துவீச்சில் விரைவாக ஆட்டமிழக்க அணியின் கேப்டன் தவான் மட்டுமே அதிரடியாக விளையாடி 70 ரன்கள் குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

மயங்க் யாதவ் மற்றும் சமர் ஜோசப்

பின்னர் வெற்றிக்குப் பிறகு நிரூபர் சந்திப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடிய சமர் ஜோசப் ஆகியோர் இணைந்து ஒன்றாக விளையாடுவார்களா? என்று நிக்கோலஸ் பூரானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது “அனைத்துமே சாத்தியம்தான். ஆனால் அது அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் லக்னோ அணியின் முதலாளிகளின் கையில் இருக்கிறது. இந்த நிகழ்வு மிகவும் அற்புதமாக இருக்கிறது நாங்கள் ஒரு இளம் பந்து வீச்சு படையைக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியின் மூலம் நாங்கள் நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். அழுத்தத்திற்கு மத்தியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

மயங்க் யாதவ் எப்போதும் நெட்சில் மெதுவாக பந்து வீச மாட்டார். நான் அவரது பந்துவீச்சை ஒரு முறை எதிர் கொண்டிருக்கிறேன். எங்கள் அணியில் கைல் மேயர்ஸ் அவர் வேகமான பந்துவீச்சாளர் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அணி நிர்வாகம் இவருக்கு இன்று வாய்ப்பு கொடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க: முதல்ல மெதுவா வீச நினைச்சேன்.. கேப்டன் ஒன்னு சொன்னதும் 156 கிமீல தெறிக்க விட்டுட்டேன் – மயங்க் யாதவ் பேட்டி

மேலும் சிறிய மைதானங்களில் ரண்களை குவிக்க உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் எப்போதுமே இருப்பார்கள். ஒரு குழுவாக அணி எப்போதுமே ஒன்றாக இருக்க வேண்டும். இளம் பந்துவீச்சாளர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தால் அவர்களை விமர்சிக்காதீர்கள் ஆறுதல் கூறுங்கள் என்று கூறியிருக்கிறார்.