டாஸ் போட கேப்டனாக வராமல்.. பேட்ஸ்மேனாக ஆடும் கேஎல்.ராகுல்.. காரணம் என்ன? – பூரன் விளக்கம்

0
571
Pooran

இன்று ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் 11வது போட்டியில் லக்னோ எகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றி ஒரு போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி தோல்வி அடைந்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டார். கடந்த முறை கேஎல்.ராகுல் காயம் அடைந்திருந்த போது லக்னோ அணியை வழிநடத்திய குருனால் பாண்டியா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

மேலும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் போது முதல் டெஸ்டில் விளையாடி கே.எல்.ராகுல் காயம் அடைந்தார். இதற்குப் பின் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு திரும்பி வரவில்லை. நீண்ட நாட்களாக அவருக்கு தொடை பகுதியில் இருந்து வரும் பிரச்சனை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக வழிநடத்தினார். மேலும் அந்தப் போட்டியில் பேட்டிங்கில் அரை சதமும் அடித்து இருந்தார் விக்கெட் கீப்பிங் செய்தார்.

ஆனால் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்கு கேப்டன் கேஎல்.ராகுலுக்கு பதிலாக துணை கேப்டன் நிக்கோலஸ் பூரன் வந்தார்.அதே சமயத்தில் கேஎல்.ராகுல் ஓபனிங் பேட்ஸ்மேனாக தற்பொழுது லக்னோ அணிக்கு பேட்டிங் செய்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: 90 ஓவர் 4 விக்கெட்.. சொல்லி அடிக்கும் இலங்கை.. சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணி திணறல்

கேப்டனாக கேஎல்.ராகுல் ஏன் வரவில்லை என்று நிக்கோலஸ் பூரன் கூறும் பொழுது “கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். எனவே இவ்வளவு நீண்ட பெரிய ஐபிஎல் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்க நாங்கள் நினைக்கிறோம். எனவே அவர் கேப்டனாக இன்றைய போட்டியில் செயல்பட மாட்டார். இம்பேக்ட் பிளேயராக மட்டுமே இருப்பார். வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் அதை பயன்படுத்தி சிறப்பாக வெளிப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.