2025 ஐபிஎல் தொடருடன் போட்டியிடும் பிஎஸ்எல்.. தைரியமான முடிவு எடுத்த பாகிஸ்தான்.. பின்னணி என்ன?

0
38
Pakistan

தற்பொழுது இந்தியாவில் 17ஆவது ஆண்டாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் ஐபிஎல் தொடர் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரை உலகின் முதன்மையான டி20 லீக் தொடராகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் காலத்தில் பிஎஸ்எல் டி20 தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது.

பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக்குகளில் இந்தியாவின் ஐபிஎல் தொடரை முதல் இடத்தில் இருக்கிறது. மிகக்குறிப்பாக இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஈடுகட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரியது. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் வியாபார ரீதியாக வெற்றி அடைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் உலக கிரிக்கெட் நாடுகள் பெரும்பாலும் தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது கிடையாது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்பி வைக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தினால், அந்த அணி மட்டும் ஏதாவது ஒரு தொடரில் உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் இரண்டாம் கட்ட அணிகளுடன் விளையாடும். அதே சமயத்தில் அவர்களுடைய பிஎஸ்எல் டி20 லீக் பெரும்பாலும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும்.

இந்த நிலையில் மற்ற நாடுகள் ஐபிஎல் தொடர் நடக்கும் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடாததால், பிஎஸ்எல் தொடரை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தாமல், ஐபிஎல் தொடர் நடத்தப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதன் மூலம் கூடுதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை 2024: இந்திய அணியில் மாற்றம் செய்ய முடியுமா.. விதி என்ன சொல்கிறது?

இந்த முறை 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் லீக் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்காக மட்டுமே இல்லாமல் நிரந்தரமாகவே பி எஸ் எல் தொடரை ஐபிஎல் தொடர் காலத்தில் நடத்த பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் தொடரில் பங்கு பெறும் அணிகளில் 2 அணிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு வெற்றியடையுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.