இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் நேரத்தில்.. கம்பீர் செய்யும் யாரும் செய்யாத காரியம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.. வெளியான தகவல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்தியாவில் ஐபிஎல் நடைபெறும் நேரத்தில் எந்த ஒரு இந்திய பயிற்சியாளரும் செய்யாத ஒரு முக்கிய காரியத்தை செய்யப் போகிறார் என செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி துவங்கி மே இறுதி வாரம் வரையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய இரண்டு மாத காலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் மட்டுமே இருக்கும். மற்ற பெரிய தொடர்கள் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் – ரவி சாஸ்திரி

இந்திய அணிக்கு சமீபத்தில் தலைமை பயிற்சியாளராக இருந்திருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் ஐபிஎல் காலத்தில் இரண்டு மாதம் ஓய்வெடுத்தார்கள். அவர்கள் இந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கான எந்த ஒரு வேலைகளிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஜூன் மாதம் இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக இந்திய ஏ அணிவுடன் இணைந்து ஐபிஎல் நேரத்தில் இங்கிலாந்து செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதன் மூலம் ரிசர்வ் வீரர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கம்பீர் விரும்புவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்திய ஏ அணி சுற்றுப்பயணம்

இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கான துவக்கத்தில் முதல் தொடராக இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக இந்திய ஏ அணி இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய ஏ அணி உடன் கம்பீர் செல்ல இருப்பதாக செய்திகள் கூறுகிறது. அவர் பயிற்சியாளராக செல்கிறார் அல்லது பார்வையாளராக செல்கிறாரா? என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : ஐசிசி ODI ரேங்க்.. தப்பித்த கில்.. ஆச்சரியப்படுத்தும் பாபர் அசாம்.. இந்தியா ஆதிக்கம்.. முழு தகவல்கள்

இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக யாரை தேர்வு செய்யலாம்? என்பது குறித்து கம்பீர் தெளிவான முடிவுக்கு வர முடியும் என்று நம்புகிறார். மேலும் இந்திய ஏ அணிக்கு போதிய அளவு போட்டிகள் இல்லை என்றும், போட்டிகளை இனி இந்திய ஏ அணிக்கு அதிகரிக்க வேண்டும் என்று கம்பீர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி செய்யாத விஷயத்தை கம்பீர் செய்கிறார் என இந்திய ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by