2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்த பிறகு வெளியாக இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு கடினமானரு துபாய் மைதானத்தில் விளையாடியது. இருந்தபோதிலும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர்கள் சிறப்பான நிலையை அடைந்திருக்கிறார்கள்.
கில் தொடர்ந்து முதலிடம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஆட்டக்காரர் கில் சதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு அவரிடம் இருந்து ஒரு அரைசதம் கூட வரவில்லை. இருந்த போதும் 784 புள்ளிகள் உடன் அவர் முதலிடத்தில் நீடிக்கிறார். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு பெரிய தாக்கத்தை தராத பாபர் அசாம் 770 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மிக முக்கியமான 76 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 756 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கு இந்த தொடரில் இந்த ஒரு போட்டி மட்டுமே சிறப்பாக அமைந்தது.
விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார், மேலும் செமி பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் இறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்த காரணத்தினால் ஒரு இடம் இறங்கி 736 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : 3 அணிகள் 2 போட்டிகள்.. WPL 2025 பிளே ஆப் நடக்கும் நாள் நேரம்.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்
இந்த தொடரில் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு தாக்கம் தரக்கூடிய வகையில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்கள் இந்திய அணிக்கு குவித்தவராக இருந்தார். இருந்த போதிலும் சதம் மற்றும் அரை சதங்களை அவர் தவறவிட்ட காரணத்தினால் 704 புள்ளிகள் உடன் தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல் :
சுப்மன் கில் – 784
பாபர் அசாம் – 770
ரோஹித் சர்மா – 756
ஹென்ரிச் கிளாசென் – 744
விராட் கோஹ்லி – 736
டேரில் மிட்செல் – 721
ஹாரி டெக்டர் – 713
ஷ்ரேயாஸ் ஐயர் – 704
சரித் அசலங்க – 694
இப்ராஹிம் சட்ரன் – 676






