லக்னோ அணிக்கு 6 வருடத்திற்கு பிறகு ஐபிஎல் திரும்பும் நியூஸி வீரர்.. ஷாமர் ஜோசப் விளையாடுவாரா?

0
190
LSG

ஐபிஎல் 17வது சீசனில் கேஎல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடி தோற்றது. வெற்றியை நெருங்கிய போதிலும் சந்திப் சர்மாவின் சிறப்பான இறுதி கட்டப் பந்துவீச்சினால் லக்னோ அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இன்று தனது இரண்டாவது போட்டியில், லக்னோ அணி சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி தனது முதல் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி மிகவும் சுமாராக இருப்பது பின்னடைவாக அமைகிறது.

- Advertisement -

இந்த நிலையில் லக்னோ அணியில் அதிவேக பந்துவீச்சாளருக்கான இடத்தில் இங்கிலாந்தின் மார்க் வுட்டை வைத்திருந்தார்கள். அவர் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருந்ததாலும் அதற்கு அடுத்த போட்டிகளுக்கு தயாராக வேண்டி இருந்ததாலும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருடைய இடத்திற்கு தற்போதைய கரீபியன் இளம் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் சேர்க்கப்பட்டார்.

முதல் போட்டியிலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவீன் உல் ஹக் விளையாடினார். இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது ” தற்பொழுது மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் மட்டுமேவிளையாடும் வாய்ப்பு இருக்கிறது. அவர் திறமையானவர் கூடிய விரைவில் விளையாடுவார்” என்று கூறியிருந்தார்.

மேலும் மார்க் வுட்டுக்கு அடுத்து இன்னொரு இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லியம் லக்னோ அணியில் இருந்து வெளியேறினார். தற்பொழுது அவருடைய இடத்திற்கு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் 1.80 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்கு விளையாடுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிவம் துபே ஆர்சிபி-ல இருந்து தப்பிச்சிட்டாரு.. அவங்க இதை பண்ணவே மாட்டாங்க – ஹர்பஜன் சிங் கருத்து

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு வாங்கப்பட்டார். தற்பொழுது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.