சிவம் துபே ஆர்சிபி-ல இருந்து தப்பிச்சிட்டாரு.. அவங்க இதை பண்ணவே மாட்டாங்க – ஹர்பஜன் சிங் கருத்து

0
331
Shivam

2024 ஐபிஎல் 17வது சீசனுக்கு மினி ஏலம் முடிந்ததிலிருந்து கிரிக்கெட் வல்லுனர்கள் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார்கள். அந்த அணியில் முகமது சிராஜ் மட்டுமே விக்கெட் கைப்பற்றக்கூடிய அளவில் இருந்தார். மற்றபடி பெரிய விக்கெட் டேக்கிங் பவுலர்கள் யாரும் இல்லை. தற்பொழுது அந்த அணியின் இந்த பிரச்சனை வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் எடுத்த ஆர்சிபி அணி, பந்துவீச்சில் பவர் பிளேவில் 85 ரன்கள் கொடுத்தது. மேலும் பதினாறு புள்ளி ஐந்து ஓவரில் கொல்கத்தா இலக்கை எட்டி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரண்களை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தக்கூடிய வந்து வீச்சாளர்கள் குறைந்தபட்சம் ஒருவராவது அணியில் இருக்க வேண்டும். இந்த வகையில் எடுத்துக் கொண்டால் அந்த அணியில் தற்போது அப்படி யாருமே கிடையாது. ஒரு போட்டியில் நன்றாக செயல்பட்டால் அடுத்த போட்டியில் பேட்டிங் வரை சொதப்பக்கூடிய வீரர்களே இருக்கிறார்கள்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஹர்பஜன்சிங் ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் எங்கே? ஆர்சிபி அணியில் கவலை அளிக்கக்கூடிய பகுதியாக பந்துவீச்சு இருக்கிறது. அவர்கள் சாகலை என்ன செய்தார்கள் என்று பார்த்தோம். அவரை அணியிலிருந்து விட்டு விட்டார்கள். அவர் ஜாம்பவான் பவுலர்களில் ஒருவர்.

இதற்கடுத்து அவரது இடத்தில் ஹசரங்காவை வைத்திருந்தார்கள். பின்பு அவர்கள் அவரையும் வெளியே விட்டு விட்டார்கள். பெரிய வீரர்களை எல்லாம் வெளிய விட்டுவிட்டு போட்டியை ஜெயிக்க முடியாது. சிராஜை போட்டியை வெல்லக்கூடிய எந்த பவுலரையும் நான் ஆர்சிபி அணியில் பார்க்கவில்லை. தற்பொழுது சிராஜும் பார்முக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இது மட்டுமில்லாமல் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கரன் சர்மாவையும் வெளியில் வைத்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி 59 பந்து 83 ரன்..கேகேஆர் 5.5 ஓவர் 85 ரன்.. ஆர்சிபி தோல்விக்கு காரணம் யார்? – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

ஆர்சிபி அணி நிர்வாகம் வீரர்களை ஆதரிப்பது கிடையாது. இப்போது சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் துபேவின் பேட்டிங்கை அவர்களால் பெற முடியவில்லை. கடந்த ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்லும் பொழுது மிடில் வரிசை பேட்டிங்கில் அவர் முக்கிய வீரராக இருந்தார். அதே சமயத்தில் அவர் ஆர்சிபி-ல் இருந்த பொழுது செயல்பட முடியவில்லை. அதே சமயத்தில் சிஎஸ்கே அணியில் அவருக்கு சுதந்திரமும் ஆதரவும் கிடைத்தது. ஆனால் ஆர்சிபி அணியில் அவருக்கு அப்படி கிடைக்கவில்லை. அவரை ஆறாவது ஏழாவது இடத்தில் அனுப்பினால் ரன்கள் அடிக்க முடியாது” எனக் கூறியிருக்கிறார்.