ஸ்ரேயாசை சிக்க வைத்த என்சிஏ.. கடுப்பான பிசிசிஐ.. ஜெய் ஷா பேச்சுக்கு மதிப்பில்லையா?

0
178
Shreyas

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், மிடில் ஆர்டரில் வந்து 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்திருந்தார்.

முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தின் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தவறவிட்டிருந்தார். மேலும் இந்திய அணியில் வெளியே இருந்த அவர் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்த காரணத்தினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் உள்நாட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சுமாராக விளையாடி 35, 13, 27, 39 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனை எடுத்து அவர் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். காயத்தின் காரணமாக வெளியேறினார் என்று கூறப்பட்டாலும், அவர் தேர்வுக்கு தயாராக இருந்துதான் புறக்கணிக்கப்பட்டார் என்று அப்பொழுதே செய்திகள் வெளிவந்தன.

- Advertisement -

தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சித் தொடரின் கால்இறுதிப் போட்டியில் பரோடா அணிக்கு எதிராக, தனது மாநில அணியான மும்பைக்கு விளையாடாமல் காயத்தை காரணம் காட்டி வெளியே சென்றார்.

இந்த நிலையில் என்சிஏ-வின் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ தலைவர் நிதின் படேல் பிசிசிஐக்கு அனுப்பி உள்ள இமெயிலில் “இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் அணித்தேர்வுக்கு தயாராக முழு உடல் தகுதியுடன் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : “என் வாழ்நாள்ல.. இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததே கிடையாது.. எதுவுமே புரியல” – ஆரம்பித்த பென் ஸ்டோக்ஸ்

சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய ஒப்பந்தம் பெற்ற மற்றும் இந்திய ஏ அணியின் வீரர்கள் காயம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார். ஆனால் அதையும் மீறி தற்பொழுது ஸ்ரேயாஸ் விளையாடாமல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேற்கொண்டு பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.