“என் வாழ்நாள்ல.. இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததே கிடையாது.. எதுவுமே புரியல” – ஆரம்பித்த பென் ஸ்டோக்ஸ்

0
1090
Stokes

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் அமைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நடக்க இருக்கிறது.

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில், முதல் போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தின் ஆடுகளத்தில் பந்தில் கொஞ்சம் சுழற்சி இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மூன்றாவது போட்டி நடைபெற்ற குஜராத் ராஜ்கோட் மைதானம் இரண்டிலும் பெரிய அளவில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகங்கள் இல்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிக சாதகம் இருந்தது.

இதன் காரணமாக நான்காவது போட்டி நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் எப்படி அமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் நிறைய இருந்து வருகிறது. இந்திய அணி வழக்கமான சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து, தொடரை ராஞ்சியிலேயே கைப்பற்றி விடுவதற்கு முயற்சி செய்யுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் தற்பொழுது அமைந்திருக்கும் ராஞ்சி ஆடுகளத்தை போல்தான் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும், எனவே இந்த ஆடுகளம் எப்படி செயல்படும் என்று சொல்ல முடியாது என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இது போன்ற ஒன்றை நான் இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது. எனவே இந்த ஆடுகளம்இருக்கும் என்று என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த ஆடுகளத்தை இரண்டு முனைகளிலும் இருந்து பார்த்தால், நான் இதுவரை பார்த்து பழகிய ஆடுகளங்கள் போல் எதுவுமே இல்லை.

இது உடைமாற்றும் அறையிலிருந்து பார்க்கும் பொழுது புல் வெளி போல தெரிகிறது. அதை வெளியில் வந்து பார்த்தால் வித்தியாசமாக கொஞ்சம் இருட்டாக விரிசல்கள் உடன் காணப்படுகிறது.

இது விளையாட்டு. இங்கு நீங்கள் நன்றாக செயல்படும் பொழுது பாராட்டு கிடைக்கும் அதே நீங்கள் நன்றாக செயல்படவில்லை என்றால் அதற்கு எதிராகத்தான் நடக்கும். நாங்கள் இதைத் தாண்டி வெளியில் வந்து செயல்படுவோம்.

இதையும் படிங்க : நாளை 4வது டெஸ்ட்.. மழை வாய்ப்பு.. ஆடுகளம்.. மைதான புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள் உள்ளே

நான்காவதுடெஸ்ட் போட்டி எங்களுக்கு முக்கியமானது என்று தெரியும். நானும் எனது அணியில் உள்ள வீரர்களும் வெளியில் வந்து ஏதாவது ஒரு விதத்தில் ஆட்டத்தில் பிரதிபலிப்போம். ஆனால் ஆட்டத்தின் ரிசல்ட்டை மனதில் வைத்து இருக்காது” என்று கூறியிருக்கிறார்.