கவாஸ்கர் சச்சினுக்கு செஞ்சத.. ஜெய்ஸ்வாலுக்கும் செய்யுங்க.. அந்த பையன் பாவம் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

0
247
Jaiswal

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரும் இந்திய t20 அணியின் துவக்க ஆட்டக்காரருமான இளம் வீரர் ஜெய்ஸ்வால் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். அதே சமயத்தில் டி20 உலகக் கோப்பை இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில்அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் அதிரடியான ஆரம்பத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். முதல் பந்தில் இருந்து அவர் அதிரடியாக விளையாட நினைக்கின்ற காரணத்தினால் விக்கெட்டை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. முதல் நான்கு போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக ஆரம்பித்து சீக்கிரத்தில் விக்கெட்டை கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளாக அவர் கொஞ்சம் கிரீசில் நேரம் கொடுத்து நின்று விளையாட ஆரம்பித்திருக்கிறார். இதனால் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் குறிப்பிட்ட 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார். மீண்டும் பெரிய ரன்கள் அடிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் கூறும் பொழுது ” நல்ல பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது கிரிக்கெட்டில் முதல்முறையாக நடக்க கூடியது கிடையாது. சுனில் கவாஸ்கருக்கு நடந்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் ஃபார்ம் சரியில்லாமல் மீண்டு வந்திருக்கிறார். நானும் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி இருக்கிறேன். கவாஸ்கர் மற்றும் சச்சினை அனுமதித்த பொழுது ஏன் ஜெய்ஸ்வாலை மட்டும் அனுமதிக்க முடியாது?

கிரீசில் நேரத்தை செலவிடுவதின் முக்கியத்துவத்தை ஜெய்ஸ்வால் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது விக்கெட்டை கொடுத்து வருகிறார். குஜராத்துக்கு முந்தைய ஆட்டத்தில் அவர் விளையாடும் பொழுது நன்றாக தெரிந்தார். ஆனால் கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முடியவில்லை. சில பந்துகளை விளையாடுவதின் மூலம் அவர் ஆடுகளத்தை உணர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு வரமும் சாபமும் இதுதான்.. கடைசி ஓவர்ல போல்ட் கிட்ட ஒரு விஷயத்தை சொன்னேன் – ஆட்டநாயகன் ஹெட்மயர் பேட்டி

எப்பொழுது தன்னுடைய பேட்டில் பந்து நன்றாக படுகிறது என்று தெரிகிறதோ அப்பொழுது அவர் வெளியேறி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். அவரது பேட்டிங் டெக்னிக்கில் எந்த தவறும் கிடையாது. மேலும் தன்னுடைய பார்ட்னரை கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடச் சொல்லி, இவர் கொஞ்சம் டாட் பந்துகள் விளையாடி செட்டில் ஆகலாம்” என்று கூறியிருக்கிறார்.