உங்களுக்கெல்லாம் எதுக்கு டெக்னாலஜி?.. அதை இனிமேல் நீங்க தொடவே தொடாதிங்க – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

0
947
Sanju

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஏதாவது ஒரு சம்பவங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்து விடும். இந்த வகையில் நேற்று சஞ்சு சம்சனுக்கு மூன்றாவது நடுவர் கொடுத்த அவுட் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி தற்போது அது குறித்து எல்லோரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று டெல்லி அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் தங்கள் அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிக்கான அடித்தளத்தை மிகவும் அபாரமாக உருவாக்கியிருந்தார். கடைசி ஐந்து ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவைப்பட்ட பொழுது அவர்களிடம் ஏழு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை ஷாய் ஹோப் பிடிக்க, அவரது கால் எல்லைக்கோட்டில் பட்டதா? என சந்தேகம் இருந்தது. எனவே மூன்றாவது நடுவர் ரீப்ளே பார்க்க சென்றார். இதுவரை சரியாக செயல்பட்ட மூன்றாவது நடுவர், கால் பட்டதா இல்லையா? என்று ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத பொழுது, ஒருமுறை பார்த்ததோடு அவுட் எனத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் கள நடுவர்களுடன் கொஞ்சம் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் உடனே வெளியில் செல்லவில்லை. மேலும் வெளியிலும் விவாதங்கள் நடைபெற்றது. மூன்றாவது நடுவர் இதை இரண்டாவது முறையாக தொலைக்காட்சியில் பார்க்க மறுத்துவிட்டார். இது பல சந்தேகங்களைக் கிளப்ப, தற்போது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து கூறும் பொழுது “அந்த பீல்டர் எல்லைக்கு விட்டு கயிற்றை இரண்டு முறை தொட்டுவிட்டார். நிச்சயமாக சஞ்சு சாம்சன் அவுட் ஆகவே கிடையாது. மூன்றாவது நடுவர் அதை வெவ்வேறு கோணங்களில் பார்த்திருக்க வேண்டும். உங்களால் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால் தயவு செய்து அதை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா இல்லை.. இந்த இந்திய பந்துவீச்சாளரை பார்த்தால் எல்லாரும் பயப்படறாங்க – ஜாகிர் கான் பேச்சு

சஞ்சு சாம்சன் விக்கெட் விஷயத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் ஆட்டத்தையே மாற்றியது. இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இதை மறுபரிசீலனை செய்து மீண்டும் திரும்ப பார்த்தால், அந்த பீல்டர் எல்லைக் கயிற்றை இருமுறை தொட்டிருப்பது தெளிவாக தெரியும்” என உறுதியாகக் கூறியிருக்கிறார்.