கம்மின்ஸ் இவ்வளவு கோழைத்தனமா இருக்க கூடாது.. ஆர்சிபி செஞ்ச அதே தப்பு – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

0
120
Novjoth

நேற்று ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் வெகு எளிதாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து நவ்ஜோத் சிங் சித்து கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வராத பொழுதே சன்பீர் சிங்கை பேட்டிங் இம்பேக்ட் பிளேயராக உள்ளே எடுத்தது. இதன் காரணமாக ஒரு பந்துவீச்சாளரை கூடுதலாக எடுக்க முடியாமல் போனது.

- Advertisement -

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் ரன்கள் கொடுத்து கொண்டு இருக்க, சுழல் பந்துவீச்சாளர்கள் அவர்களை விட குறைவான ரன்கள் தரக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். கொல்கத்தா அணி இரண்டு ஸ்பின்னர்களை வழக்கமாக விளையாடி அசத்தி வருகிறது. ஆனால் ஹைதராபாத் அணி இந்த முறையில் செல்லவில்லை.

இதுகுறித்து பேசி இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து கூறும்பொழுது “ஹைதராபாத் அணி ஆர்சிபி செய்த தவறுகளை அப்படியே செய்கிறார்கள். தற்போது அந்த அணியில் சரியான ஸ்பின்னர்கள் இல்லை. ஆர்சிபி அணி ஆரம்பத்தில் தங்களுடைய ஸ்பின்னர்களை சேர்க்காமல் விளையாடியது. இதனால் அந்த அணி தோற்றது. பிறகு இரண்டு ஸ்பின்னர்களை உள்ளே கொண்டு வந்து விளையாடிய பிறகுதான் நல்ல முடிவுகள் கிடைக்க ஆரம்பித்தது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள் இருவரை வைத்து விளையாட வேண்டுமா? என்று கேட்கிறார்கள். ஸ்பின்னர்கள் ரன்னுக்கு சென்று விடுவார்கள் என கோழைத்தனமாக அஞ்சுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 11 நாள் பிரச்சனை.. ஆர்சிபிகிட்ட ராஜஸ்தான் நிக்கவே முடியாது.. இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

புவனேஸ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ் என மூன்று பவுலர்களை மட்டுமே அந்த அணி சார்ந்திருக்கிறது. மீதம் இரண்டு பந்துவீச்சாளர்கள் வீசும் 8 ஓவர்களை யார் வீசுவது?கொல்கத்தா அணி இந்த சீசனில் இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே வைத்து 35 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. ஆனால் ஹைதராபாத் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.