11 நாள் பிரச்சனை.. ஆர்சிபிகிட்ட ராஜஸ்தான் நிக்கவே முடியாது.. இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

0
183
Gavaskar

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இன்றைய போட்டியில் ஆர்சிபி அணிதான் வெல்லும் என சுனில் கவாஸ்கர் மிக உறுதியாக கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் அணி தங்களுடைய முதல் 8 ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களை வென்று பிளே ஆப் வாய்ப்பை அப்பொழுதே உறுதிப்படுத்திய ஒரு அணியாக இருந்தது. அதே சமயத்தில் ஆர்சிபி அணி தங்களின் எட்டு ஆட்டத்தில் ஏழு ஆட்டங்களை தோற்று ஏறக்குறைய இழந்துவிட்ட அணியாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று தள்ளப்பட்டது. அதே சமயத்தில் ஆர் சி பி அணி தங்களின் கடைசி ஆறு ஆட்டங்களை வென்று, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அபாரமான முறையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தற்பொழுது ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் இல்லையென்றாலும் கூட, அந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வரும் வேகத்தில் இருப்பது, அந்த அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணி வீரர்கள் அளவற்ற நம்பிக்கை மற்றும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் இது தொடர்ந்து தோற்று வரும் ராஜஸ்தான் வீரர்களிடம் இல்லை.

இந்தப் போட்டி குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆர்சிபி செய்திருக்கக் கூடிய வேலை முழுவதுமாக தனித்தன்மை வாய்ந்தது. அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டி இருந்தது. அதை அந்த அணியின் மூத்த முன்னணி வீரர்கள் செய்திருக்கிறார்கள். விராட் மற்றும் பாஃப் இருவரும் அணிக்குப் பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் விளையாடும் அசாதாரண கிரிக்கெட் மூலம் சக வீரர்களுக்கு தைரியத்தை கொடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: 2 வாரமா நரைன்கிட்ட கெஞ்சி பாத்துட்டோம்.. ஆனா அவர் அந்த விஷயத்துக்கு சம்மதிக்கவே இல்ல – ஆன்ட்ரே ரசல் பேட்டி

கடந்த நான்கு போட்டிகளாக ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் அவர்கள் தங்களுடைய கடைசி போட்டியிலும் மழையின் காரணமாக விளையாடவில்லை. அவர்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக போட்டி இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் தோல்வி அடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் ஒருதலைப் பட்சமாக ஆர்சிபி வெல்லாவிட்டால் தான் ஆச்சரியம். அவர்கள் வெல்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.