வெளியில எங்களை நம்புனது அந்த ஒரே மனுஷன்தான்.. அவரை ஏமாற்றாம அடிச்சு வந்திருக்கோம் – ரஷீத் கான் பேட்டி

0
1764
Rashid

இன்று டி20 உலக கோப்பையில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக இதன் காரணமாக ஆஸ்திரேலியா வெளியேறியிருக்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி இந்த இலக்கை 12 ஓவர்களில் எட்டினால் அவர்களும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியான சூழலில் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் அரையிறுதிக்கு செல்வதற்காக வேகமாக விளையாடி விக்கெட்டுகளை கொடுக்க, பரபரப்பான கட்டத்தில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்திருக்கிறது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் “நாங்கள் அரையிறுதியில் இருப்பது கனவு போன்றது. நாங்கள் ஆரம்பத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடிக்கும் பொழுது நம்பிக்கை வந்தது. அந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கிடையாது. நாங்கள்அரையிறுதிக்கு வருவோம் என்று எங்களை நம்பி எங்கள் பெயரை சொன்ன ஒரே ஆள் பிரையன் லாரா மட்டும்தான். நாங்கள் அவரை ஏமாற்ற விரும்பவில்லை.

நாங்கள் இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்தோம். ஆனால் இதுவெல்லாம் மனநிலை சம்பந்தப்பட்டது. 12 ஓவர்களில் இந்த இலக்கை துரத்த பங்களாதேஷ் முயற்சி செய்வார்கள் என்று எங்களுக்கு தெரியும். இந்த இடத்தில் தான் நாங்கள் விக்கெட் எடுத்து வெற்றி பெற முடியும். இந்த இடத்தில் நாங்கள் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தோம். எல்லோரும் அற்புதமான பயிற்சியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 9 பந்து 9 ரன்.. 2 விக்கெட்.. ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது ஆப்கான்.. பங்களாதேஷ் அணிக்கு எதிராக திரில் வெற்றி

10 விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமே வெற்றிக்கு ஒரே வழி. எங்களுடைய பந்துவீச்சுதான் எங்களுடைய பலம். எல்லோருமே சிறப்பாக இருந்தார்கள். நாங்கள் தாயகம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் எங்களுக்காக காத்திருக்கும். மேலும் அடுத்தடுத்து விஷயங்களை எளிமையாக வைத்து, பெரிய சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.