“பாஸ்பால தூக்கி போடுங்க.. இத செய்யாம நீங்க ஜெயிக்க மாட்டீங்க” – நாசர் ஹூசைன் அறிவுரை

0
839
Hussain

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. நேற்று முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என அதிரடியாக கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள் கடைசி போட்டியை தவிர மற்ற நான்கு போட்டிகளிலும் முன்னிலையில் வந்து, அவர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாமல் தோற்று இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களால் இந்த தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் நல்ல தொடக்கத்தை இங்கிலாந்து அணிக்கு கொடுத்தார்கள். அவர்கள் புதிய பந்தில் தருகின்ற தொடக்கத்தை, அதற்கடுத்து வருகின்ற இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்மேன்களால் பயன்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.

இந்தத் தொடரில் உதாரணமாக கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் முதல் போட்டியில் அடித்த அரைசதம்தான் கடைசி அரைசதமாக அமைந்தது. இதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ஒல்லி போப் அடித்த சதமே அவருக்கு கடைசி அரைசதத்தை தாண்டிய ஸ்கோர் ஆக பதிவானது.

இங்கிலாந்து அணியின் இந்த மெகா மிடில் ஆர்டர் சொதப்பல் காரணமாக அந்த அணி தோல்வி அடைந்தது. தற்பொழுது இது குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கூறும்பொழுது ” இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் சரிவுகள்தான் முக்கிய பிரச்சினையாக இருந்தது. அவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகு பல சந்தர்ப்பங்களை தவற விட்டார்கள். மிடில் ஆர்டர் சரிந்ததால் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.

இந்தியாவில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் உண்மையில் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தன. எனவே அது குறித்து புகார் சொல்ல எதுவுமே கிடையாது. மேலும் இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டியில் மூன்று முறை டாஸ் வென்றார்கள். இவர்கள் இந்த தோல்வி குறித்து என்ன செய்யப் போகிறார்கள், நாங்கள் வேறு என்ன வித்தியாசமாக செய்ய முடியும் என்று சொல்வார்களா? இதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நீங்கள் ஏன் சரிந்தீர்கள் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்? ஜாக் கிரவுலி ஏன் நல்ல தொடக்கம் பெற்று உடனே வெளியேறுகிறார்? பந்து புதியதாகவும் சுழலும் பொழுதும் ஏன் பென் டக்கெட் சுழற் பந்துவீச்சாளர்களை அடிக்க நினைக்கிறார்? ஒல்லி போப் ஒரு சதத்திற்கு பிறகு ஏன் ரன்களே அடிக்கவில்லை.

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடக்குமா? எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்?.. பிசிசிஐ பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நீங்கள் உங்களுடைய சொந்த விளையாட்டை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் அவரிடம் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே தனிப்பட்ட வீரராகவும் அணியாகவும் இங்கிலாந்து அணியால் முன்னேற முடியும்” எனக் கூறியிருக்கிறார்.