“டிராவிட்க்கு புரிஞ்சிருக்கும்.. இங்கிலாந்து அணிக்கு பெரியதாய் கொடுக்க போகிறார்கள்” – நாசர் ஹுசைன் பேச்சு

0
369
Dravid

இங்கிலாந்து அணியில் 41 வயதான ஜிம்மி ஆண்டர்சன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்திய சூழ்நிலையில் பந்து வீசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இதுவே கடைசி இந்திய சுற்றுப்பயணமாக இருப்பதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையே நடக்கும் மோதல் கிரிக்கெட்டை மிகவும் சுவாரசியப்படுத்தி ரசிகர்களுக்கு கொடுக்கும் ஒரு விஷயமாக இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் 90களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இருவரிடையே நடக்கும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மோதல் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட்ட ஒன்று. ஒரு போட்டி துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த பேச்சுகள் ஆரம்பித்து விடும்.

இந்த வகையில் நவீன கால கிரிக்கெட்டில் ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே நடந்த கிரிக்கெட் மோதல் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரசித்தமான ஒன்று. இதில் இருவருமே வென்றும் இருக்கிறார்கள் தோற்றும் இருக்கிறார்கள்.

தற்போது விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியே இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இருவரது மோதலையும் களத்தில் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ஆண்டர்சன் இடையே நடக்கும் மோதலை பார்க்க முடியாதது ஒன்றுதான் குறையாக இருக்கிறது. எனவே விராட் கோலி விட்டுத்தராமல் திரும்பவும் வந்து விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்.

இந்தத் தொடரில் இந்தியாவைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் நான்கு இன்னிங்ஸ்கலில் மூன்று இன்னிங்ஸ்கள் கொஞ்சம் ஸ்லோவாக இருந்திருக்கிறார்கள். ராகுல் டிராவிட் உள்ளுக்குள் கணக்குகள் நிச்சயம் வைத்திருப்பார். இந்திய தரப்பு இங்கிலாந்துக்கு பெரிய அளவில் திருப்பித் தருவதற்கு திட்டங்கள் கொண்டிருக்கும். அதில் ஒன்று விராட் கோலி மீண்டும் வருவது. நிச்சயமாக அந்தத் திட்டம் இரக்கமற்ற ஒன்று.

இதையும் படிங்க : “தோனி என் பாக்கெட்டில்தான்” – கெவின் பீட்டர்சனுக்கு ஜாலியா பதிலடி தந்த ஜாகிர் கான்

ஜானி பேர்ஸ்டோ சிறந்த வீரர். அவருக்கு கிடைக்கும் தொடக்கத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் மட்டும் கிடையாது இங்கிலாந்தில் எல்லோருமே இரண்டாவது டெஸ்டில் கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தாமல் விட்டார்கள். ஒருவேளை ஹாரி ப்ரூக் அணிக்கு திரும்ப வந்தாலும் கூட, இவரே தொடர்ந்து விளையாட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.