இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததின் மூலம் இந்திய இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தது, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தது, 22 வயதில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்தியர், ஒரே தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்தியர், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக ரன் அடித்தவர் என அவர் ஒரு போட்டியில் செய்த சாதனைகள் நீண்டு கொண்டே போகிறது.
2022 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவது போல விளையாடி உலகம் முழுவதும் தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
அதே பாணியில் இந்தியாவிற்கு வந்து முதல் டெஸ்ட் விளையாடி வெல்லவும் செய்தது. இதன் காரணமாக அவர்களின் பாஸ் பால் அணுகுமுறை என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாறியது. பாஸ்பால் முறையை பற்றி விமர்சனம் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் வாய் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு டெஸ்டுகளில் இந்திய அணி சிறப்பான முறையில் திரும்ப வந்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார்.
ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்கு, தாங்கள் அதிரடியாக விளையாடுவதுதான் காரணமாக அமைந்திருக்கிறது என்றும், எனவே அதற்கான பெருமையில்இங்கிலாந்து அணிக்கு பங்கு இருக்கிறது எனவும், இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியிருந்தார்.
தற்பொழுது இதற்கு பதிலடித்தர இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறும்பொழுது ” ஜெய்ஸ்வால் எங்களிடமிருந்து கற்றுக் கொண்டாரா? அவர் உங்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் உள்நாட்டில் விளையாடி, மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடி, தான் பட்ட கஷ்டங்களில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறார். நான் வேண்டுமானால் அவரிடமிருந்து கற்றுக் கொள்வேன்.
இதையும் படிங்க : 4 லெஜெண்ட் செலக்ட் செய்த.. ஆல் டைம் ஐபிஎல் அணி.. மொத்தம் 14 வீரர்கள்
பாஸ்பால் என்பது யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு வழிபாட்டு முறையாக மாறி வருகிறது. இப்படி விமர்சனங்களே இல்லாமல் இருப்பது சரியானதாக இருக்காது. நீங்கள் தொடர்ந்து மேம்படவும் கற்றுக் கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறது அதை மறக்க வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.