4 லெஜெண்ட் செலக்ட் செய்த.. ஆல் டைம் ஐபிஎல் அணி.. மொத்தம் 14 வீரர்கள்.. சச்சின் இல்லை

0
196
Ipl2024

தற்போது கிரிக்கெட் உலகில் பிரான்சிசைஸ் டி20 லீக்கில் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கும் ஐபிஎல் டி20 லீக் இருக்கிறது.

ஐபிஎல் டி20 லீக்கை பொறுத்தவரை வீரர்களின் சம்பளம் என்பது மட்டும் இல்லாமல், அவர்களுக்கான பயிற்சி வசதிகள், ஹோட்டல் மற்றும் பாதுகாப்புகள் எனவும், போட்டி தரம் மற்றும் வணிக ரீதியாகவும், உலகில் மற்ற எந்த டி20 லீக்குகளும் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணத்தினால் உலக அளவில் ஐபிஎல் தொடர் குறித்து எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தியாவில் நடைபெறுகின்ற இந்தத் தொடரை கிரிக்கெட்டின் திருவிழா என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உற்சாகமான ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகங்கள் பங்கெடுக்கின்றன. தினம் மாலையில் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து போட்டிகள் இருப்பதால், இது சாதாரண கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரிய அளவில் போய் சேர்ந்திருக்கிறது.

சச்சின், சேவாக், டிராவிட், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் அப்போதைய லெஜெண்ட்இந்திய வீரர்களும், இப்போது மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா பும்ரா எனவும் பல இந்திய நட்சத்திரங்கள் விளையாடியும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதே போல் வெளிநாட்டு வீரர்களில் ஐபிஎல் தொடரில் மிகவும் புகழ்பெற்றவர்களாக கிறிஸ் கெயில், ஏபி.டிவில்லியர்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், ஏபி.டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் ஆகியோர்இதுவரை நடந்த பதினாறு ஐபிஎல் சீசன்களில் இருந்து, ஆல் டைம் ஐபிஎல் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் இவர்கள் நால்வரும் சேர்ந்து பொதுவாக 14 வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜோ ரூட் தொடர்ந்து பாஸ்பால் விளையாடுவாரா?.. கடுப்பான மெக்கலம்.. காரசாரமான பதில்

ஐபிஎல் ஆல் டைம் அணி :

தோனி (கே), விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், ஏபி. டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பொல்லார்ட், ரஷீத் கான், சுனில் நரைன், யுஸ்வேந்திர சாகல், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.