74 ரன்னுக்கு 8 விக்கெட்.. மோசமாக தோற்ற மும்பை.. முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி

0
1625
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரின் 60ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்று, முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டு 16 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. மேலும் இரண்டு அணிகளும் ஒரு பந்துவீச்சாளர் நான்கு ஓவர்கள் பந்து வீசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகவும் மிகவும் சிறப்பான துவக்கத்தை அளித்து வந்த பில் சால்ட் 6(5), சுனில் நரைன் கோல்டன் டக் என இந்த முறை ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து நிதிஷ் ராணா 23 பந்தில் 33 ரன்கள், ரசல் 14 பந்தில் 24 ரன்கள், ரிங்கு சிங் 12 பந்தில் 20 ரன், ரமன்தீப் சிங் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்கள். 16 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா மற்றும் பியூஸ் சாவ்லா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பவர் பிளேவில் 59 ரன்கள் வந்தது. மேலும் முதல் விக்கெட்டுக்கு ஏழு ஓவர்களில் 65 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 22 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 24 பந்தில் 19 ரன்கள், சூரியகுமார் யாதவ் 14 பந்தில் 11 ரன், ஹர்திக் பாண்டியா 4 பந்தில் 2 ரன், டிம் டேவிட் 3 பந்தில் ரன் இல்லாமலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு பந்தா.. சுனில் நரைனை நிற்க வைத்து அனுப்பிய பும்ரா.. ஐபிஎல்-ன் மேஜிக் பந்து

கடைசியாக நமன் திர் 6 பந்தில் 17 ரன்கள், திலக் வருமா 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து போராடினார்கள். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 65 ரன்களுக்கு டிக்கெட் இல்லாமல் இருந்து, மேற்கொண்டு 74 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தோல்வியை அடைந்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.