நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வெல்லும் நிலையில் இருந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்கள் குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டு 16 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 16 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்கள், நிதிஷ் ராணா 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள்.
இதை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி ஆறு புள்ளி ஐந்து ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. இங்கிருந்து அடுத்த 9 ஓவர்களுக்கு, மேற்கொண்டு 74 ரன்கள் மட்டும் எடுத்து, 7 விக்கெட்டுகளையும் இழந்து, 139 ரன்கள் மட்டுமே எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணி மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 13வது போட்டியில் ஒன்பதாவது தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்து வருகிறது.
தோல்விக்குப்பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “எங்களுடைய பேட்டிங் யூனிட்டில் இருந்து ஆரம்பத்தில் நல்ல வலுவான அடித்தளம் கிடைத்தது. ஆனால் நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டு விளையாடவில்லை. ஆடுகளம் கொஞ்சம் மேலும் கீழுமாக இருந்தது. இப்படியான ஆடுகளத்தில் மொமண்டத்தை தக்க வைப்பது முக்கியம். பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் இதை எடுக்கக் கூடிய ரன்கள் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : 74 ரன்னுக்கு 8 விக்கெட்.. மோசமாக தோற்ற மும்பை.. முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி
மைதானம் எல்லையில் இருந்து பந்து வரும் ஒவ்வொரு முறையும் ஈரமாகியே திரும்பி வருகிறது. அதே சமயத்தில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கான உறுதியை கொடுத்தார்கள். அடுத்த ஆட்டம் குறித்து எந்த எண்ணமும் கிடையாது. நாங்கள் ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். ஆனால் நாங்கள் விரும்பிய முறையில் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.