கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு பந்தா.. சுனில் நரைனை நிற்க வைத்து அனுப்பிய பும்ரா.. ஐபிஎல்-ன் மேஜிக் பந்து

0
4249
Bumrah

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சுனில் நரைனின் பலவீனத்திற்கு ஏற்ற ஒரு மேஜிக் பந்தை பூம்ரா வீசி அசத்தி இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டியில் எட்டு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் பெரிய ரன் ரேட் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியை வெல்வதன் மூலமாக முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை உறுதி செய்து விடும்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெரிய அளவில் மழை பெய்து வந்தது. ஆனால் மைதானம் முழுக்க மூடி இருந்த காரணத்தினால் பிரச்சனை ஏற்படவில்லை. இந்த நிலையில் 16 ஓவர் கொண்ட போட்டியாக போட்டி 9.15க்கு தொடங்கியது.

இந்த போட்டியின் பும்ரா அதிசய இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்திக்க சுனில் நரைன் வந்தார். அவர் முன் காலை விலக்கி வைத்து பந்தை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்காக எல்லோரும் பந்தை வெளியில் யார்க்கராக வீசுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதை ஆர்சிபி அணி முதலில் இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பித்தது.

- Advertisement -

ஆனால் சாம்பியன் பும்ரா இதையே வேறு விதமாக யோசித்து இருக்கிறார். அவர் பந்தை வெளியில் வீசுவது போல லைனில் காட்டி, அதே சமயத்தில் பந்தை உள்நோக்கி ஸ்விங் செய்யும் விதமாக வீசினார். இதனால் பந்து வெளியில் இருக்கிறது என்று சுனில் நரைன் தான் சந்திக்கும் முதல் பந்து என்பதால் விட்டு விட முடிவு செய்தார். இந்த நேரத்தில் பந்து லேட் ஸ்விங் ஆகி, வெளியில் இருந்து உள்ளே வந்தது. பந்தை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்த சுனில் நரைன் கிளீன் போல்ட் ஆனார்.

இதையும் படிங்க : நாளை சிஎஸ்கேவை நிச்சயம் தோற்கடிப்போம்.. ஏற்கனவே பிளே ஆஃப்க்கு வந்திருக்கனும் – ராஜஸ்தான் டோனவன் பெரீரா பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடர் முழுக்க பேட்ஸ்மேன்களை முன் காலை விலக்கி வைத்து அடித்து மிரட்டி வந்த சுனில் நரைனை, ஒரு அற்புதமான லேட் இன் ஸ்விங் பந்தை வீசி ஏமாற்றி பும்ரா அசத்தி இருக்கிறார். நிச்சயம் இந்த பந்து கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துகளில் ஒன்றாக பதிவாகும் என்பதில் சந்தேகம் கிடையாது.

- Advertisement -