கண்ணு கலங்குது.. தோனியின் கடைசி வான்கடே போட்டி.. மும்பை ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ச்சி வீடியோ

0
341
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடருடன் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன தோனிக்கு இந்த மைதானத்தில் கடைசி போட்டியாக இதுஇருக்கலாம் என்பதால், மும்பை ரசிகர்கள் அவருக்கு கொடுத்து வரும் வரவேற்பு நெகிழ வைப்பதாக இருக்கிறது.

இதுவரை நடைபெற்று இருக்கும் பதினாறு ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறையும் என மொத்தம் பத்து முறை ஐபிஎல் கோப்பையை இரு அணிகளும் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. இதன் காரணத்தினால் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்கு எப்பொழுதும் வரவேற்பு பெரிய அளவில் இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் தோனிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் கடைசி போட்டியாக இருக்கலாம் என்பது ரசிகர்களுக்கு நெகிழ்வான நினைவுகளை தூண்டி எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இதே வான்கடே மைதானத்தில், தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியதும், அவர் அந்த இறுதிப் போட்டிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் தற்பொழுது ரசிகர்களால் நினைவு கூரப்படுகிறது.

தற்போது சிஎஸ்கே அணி மும்பையில் முகாமிட்ட இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி செல்லும் இடத்தில் எல்லாம், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனிக்கு மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து தங்களுடைய அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய போட்டியாளர்களாகவும், இரு அணியின் ரசிகர்கள் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டிருப்பவர்கள் ஆக இருந்தாலும் கூட, தோனிக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடைசிப் போட்டிக்காக தரும் ஆதரவு என்பது சிஎஸ்கே ரசிகர்களை தாண்டி எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி ரோஹித்தை விடுங்க.. இந்த 2 பேராலதான் இந்தியாவுக்கு டி20 உலககோப்பையை வாங்கி தர முடியும் – மைக்கேல் வாகன் கருத்து

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் எப்படியான ஆதரவு தருகிறார்கள் என்கின்ற வீடியோ, பாட்ஷா திரைப்படத்தில் வரும் பாடலுடன் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது!