சிஎஸ்கேவில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் திடீரென பங்களாதேஷ் பயணம்.. காரணம் என்ன.. திரும்பி வருவாரா?

0
494
Mustafizur

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கணக்கை துவங்கியது.

இதற்கு அடுத்து சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி 61 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெளியில் சென்று விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது கே கே ஆர் அணியை விட ரன் ரேட்டில் கொஞ்சம் கீழே இருப்பதால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை மறுநாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பும் சிஎஸ்கே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் எட்டாம் தேதி விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 30 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 47 ரன்களுக்கு ஒரு விக்கெட் என மொத்தம் மூன்று போட்டிகளில் 7 விக்கெட் எடுத்து பர்பில் தொப்பியை வைத்திருக்கும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் பங்களாதேஷ் திரும்புகிறார் என்கின்ற செய்தி சிஎஸ்கே அணிக்கு தற்பொழுது பிரச்சினையாக மாறி இருக்கிறது.

ஐபிஎல் தொடர் முடிந்து வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக விசா எடுப்பதற்கு பயோமெட்ரிக் கொடுப்பதற்காக அவர் பங்களாதேஷ் செல்கிறார். இதன் காரணமாக ஏப்ரல் 5 ஹைதராபாத், ஏப்ரல் 8 கொல்கத்தா பணிகளுக்கு எதிராக அவர் விளையாட மாட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கு அடுத்து பயோமெட்ரிக் வேலையை முடித்துக் கொண்டு அவர் மீண்டும் வந்து அணியுடன் இணைவார்.

- Advertisement -

இதையும் படிங்க : BAN vs SL: 192 ரன்கள்.. தொடரை வென்ற இலங்கை அணி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்

இவருடைய இடத்தில் இந்திய வீரர்கள் சர்துல் தாக்கூர் இல்லை முகேஷ் சௌத்ரி இருவரில் ஒருவர் விளையாடலாம். மேலும் இவருடைய இடத்தில் நேரடியாக ஒரு சுழல் பந்துவீச்சாளராக மொயின் அலியை கொண்டு வந்து பேட்டிங்கை இன்னும் பலப்படுத்தலாம். ஆனால் ஹைதராபாத் மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் சொர்க்கமாக இருக்கின்ற காரணத்தினால் இவர் இல்லாதது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.