BAN vs SL: 192 ரன்கள்.. தொடரை வென்ற இலங்கை அணி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்

0
3388

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

அதற்குப் பிறகு நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி இருந்தது. இதன் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜாகூர் அகமது ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 531 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இலங்கை அணியில் கருணரத்னே 86 ரன்களும், மென்டிஸ் 93 ரன்களும், சில்வா 70 ரன்களும் கமிந்து மெண்டிஸ் 92 ரன்களும், சண்டிமால் 59 ரன்களும், மது ஷங்கா 57 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் வங்காளதேச அணித் தரப்பில் ஷகிப் அல் ஹசன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு பேட்டிங் தொடங்கிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக வங்காளதேச அணியின் ஜாகிர் ஹாசன் 54 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் பந்துவீச்சில் பெர்னான்டோ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன் பிறகு 353 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தது.

பின்னர் 510 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸை விடவும் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது. வங்காளதேச அணியில் பேட்டிங்கில் அதிகபட்சமாக மெஹிதி ஹாசன் அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனால் வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 318 ரன்களுக்கு அனைத்து விக்கெடுக்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணியை 192 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதனை படைத்தது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது தற்பொழுது இரண்டாவது வெற்றியாகும்.

இலங்கை அணி தரப்பில் லகிரு குமாரா நான்கு விக்கெட்டுகளும், கமின்து மென்திஸ் மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியில் 92 ரன்கள் குவித்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கமின்து மெண்டிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் இந்தத் தொடரில் 367 ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இவரே தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இலங்கை அணி சாம்பியன் ஷிப் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலைப் பொருத்தவரை இந்திய அணி பத்து போட்டியில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தும், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 12 போட்டிகளில் 8ல் வெற்றி மூன்றில் தோல்வி என்று இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி என மூன்றாவது இடத்திலும், இலங்கை அணி நான்காவது இடத்திலும் இருக்கிறது.

இதையும் படிங்க: “வெறித்தனமா இருக்காதிங்க.. ப்ளீஸ் டைம் அவுட் பிரச்சினையில் இருந்து வெளியே வாங்க” – இலங்கை அணிக்கு பங்களாதேஷ் கேப்டன் அறிவுரை

பாகிஸ்தான் அணி ஐந்தில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வி என ஐந்தாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் நான்கில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி என ஆறாவது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி என ஏழாவது இடத்திலும், வங்காளதேச அணி நான்கில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி என எட்டாவது இடத்திலும் இங்கிலாந்து அணி 10 போட்டிகளில் மூன்று வெற்றி, ஆறு தோல்வி என பத்தாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.